தமிழ்நாடு

tamil nadu

'மாணவர்களின் எதிர்காலம் சூரியனாய் பிரகாசிக்கட்டும்' - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து

By

Published : Jun 11, 2023, 11:10 PM IST

கோடை விடுமுறை முடிவடைந்து 2023-24 ஆம் ஆண்டிற்கான கல்வியாண்டு நாளை துவங்க இருக்கும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

மாணவர்களின் எதிர்காலம் சூரியனாய் பிரகாசித்திட வாழ்த்துக்கள்- அன்பில் மகேஷ் பொய்யாமொழி
மாணவர்களின் எதிர்காலம் சூரியனாய் பிரகாசித்திட வாழ்த்துக்கள்- அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை:தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான கோடை விடுமுறை முடிவடைந்தது. இந்த நிலையில், 2023 -2024 ஆம் ஆண்டிற்கான கல்வியாண்டில் ஆறு முதல் முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் நாளை முதல் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில் அமைச்சர் அன்பில்மகேஷ் மாணவர்களுக்கு இன்று (ஜூன் 11) கூறிய வாழ்த்து செய்தியில், “உண்மையான கல்வி என்பது ஒரு குழந்தையின் உடல் மனம் ஆன்மா ஆகிய மூன்றின் ஒட்டுமொத்த ஆகச்சிறந்த மேம்பாட்டை வெளிக்கொணர்வது ஆகும் என்றார், மகாத்மா காந்தியடிகள். 'கல்வி' என்பது அறியாமையையும் மூடத்தனங்களையும் அகற்றுவதாகவும் அறிவை அள்ளிக் கொடுப்பதாகவும் இருக்க வேண்டும் என தந்தை பெரியார் கூறினார்.

போட்டியும் பொறாமையும் பொய் சிரிப்பும் நிறைந்த இவ்வுலகில் நமது பாதையில் நேராக நடந்து செல்ல நமக்கு துணையாக இருப்பது கல்வி மட்டுமே என பேரறிஞர் அண்ணா கூறினார். ஒரு மெழுகுவர்த்தி ஏற்றினால், அதை கொண்டு ஆயிரம் விளக்குகளை ஏற்றலாம் என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்தார் என்று கூறிய அவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா காணும் இக்கல்வி ஆண்டில் அவரின் சிந்தனைகளை மனதில் கொண்டு செயல்படுவோம்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: Salem: பிரம்மாண்டமான கருணாநிதி சிலை, புதிய ஈரடுக்கு பேருந்து நிலையம் திறப்பு!

மேலும் “கல்விச்சிறந்த தமிழ்நாடு என்ற மகாகவி பாரதி கூறியது போல, அதனை இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் ஆக்க ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறார், தமிழ்நாடு முதலமைச்சர். முதலமைச்சரின் தலைமையிலும், வழிகாட்டுதலிலும் நமது பள்ளிக்கல்வித்துறை கடந்த இரண்டு ஆண்டுகளில் அளப்பரிய சாதனைகளை செய்து வருகிறது. இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், கலை திருவிழா என்று பள்ளிக்கல்வித்துறை முன்னெடுக்கும் முத்தான திட்டங்களால் முன்னேற்ற பாதையில் பீடு நடைபெறுகிறது நமது துறை” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: TN School Saturday:'இனி சனிக்கிழமைகளில் பள்ளிக்கூடம் நடக்கும்' - பள்ளி மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த அமைச்சர்..!

மேலும், எல்லோருக்கும் எல்லாம் என்பதே தமிழ்நாடு அரசின் தாரக மந்திரம் அதனை அடைவதற்கு கல்வி ஒன்றே வழி எனக் கூறிய அவர், நமது அரசு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் எப்பொழுதும் துணை நிற்கும் எனவும்; எனவே, மாணவர்கள் தன்னம்பிக்கையோடு கற்கவும் ஆசிரியர்கள் நன் நம்பிக்கையோடு கற்பிக்கவும் அனைவரின் எதிர்காலமும் சூரியனாய் பிரகாசித்திடவும், இந்த கல்வி ஆண்டு சிறப்பாய் அமைய சீர்மிகு வாழ்த்துக்கள்” என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில், பள்ளி திறக்கும் போது மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள் சீருடைகள் நோட்டு புத்தகங்கள் வழங்குவதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: MK Stalin: சேலமும், கருணாநிதியும்.. ஸ்டாலின் கூறிய குட்டிக் கதை!

ABOUT THE AUTHOR

...view details