தமிழ்நாடு

tamil nadu

சி.பி.எம் சார்பில் ரூ. 10 லட்சம் கரோனா நிதி

By

Published : May 17, 2021, 3:25 PM IST

Updated : May 17, 2021, 3:32 PM IST

சென்னை: தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கரோனா தடுப்பு நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்கினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ’’கரோனா தடுப்பு நிதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பத்து லட்ச ரூபாயும், இரண்டு சட்டப்பேரவை, இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத கால ஊதியம் அளிக்க முடிவு செய்துள்ளோம். தற்போது, 10 லட்ச ரூபாய்கான காசோலையை தமிழ்நாடு முதலமைச்சரிடம் நேரில் வழங்கியுள்ளோம்.

தமிழ்நாடு அரசு மிகப்பெரிய போர் களத்தில் இறங்கியுள்ளது. கரோனா இரண்டாம் அலையில் இருந்து தமிழ்நாடு மீண்டு வளமான எதிர்காலம் அமையும். கரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதுணையாக இருக்கும்.

மேலும், பல்வேறு மாவட்டங்களில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் கடன் தொகையை வசூலிப்பதில் நெருக்கடி அளிப்பதாகவும், கடன் தொகையை திருப்பி செலுத்த கால அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் முதலமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளதாகவும்’’ அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: உருமாற்றமடைந்த கரோனா வைரஸ்களையும் கோவாக்சின் தடுக்கும்!

Last Updated : May 17, 2021, 3:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details