தமிழ்நாடு

tamil nadu

தாயை திட்டியதால் அண்ணனை கொலை செய்த தம்பி கைது

By

Published : Dec 15, 2020, 3:28 PM IST

சென்னை: தாயை திட்டியதால் சகோதரர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் அண்ணனை தம்பி அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Person killed his brother for insulting his mother
Person killed his brother for insulting his mother

சென்னை துரைப்பாக்கம் எழில் நகரை சேர்ந்தவர் டோமினிக் பிரபு(42). இவர் எழும்பூர் கண் மருத்துவமனை அருகே உள்ள தனியார் அலுவலகத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று (டிசம்பர் 14) மாலை டோமினிக் மது அருந்திவிட்டு, சூளைமேடு கில் நகரிலுள்ள தாயை பார்க்க சென்றார். அப்போது டோமினிக்கும் அவரது தாயுக்கும் இடையே பணம் தொர்பான பிரச்னை ஏற்பட்டது.

மேலும், டோமினிக் மற்றும் அவரது சகோதரர் மரியானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில் மரியான், டோமினிக்கை பிடித்து கீழே தள்ளினார். இதில் டோமினிக்கிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று தலையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்றார். அதைத்தொடர்ந்து தான் தங்கி இருந்த இடத்துக்கு சென்று சாலையோரம் படுத்து உறங்கிவிட்டார்.

கைது செய்யப்பட்டுள்ள மரியான்

இதனிடையே, இன்று (டிசம்பர் 15) காலை நீண்ட நேரமாகியும் டோமினிக் விழிக்காததால் சந்தேகமடைந்த பொதுமக்கள், சூளைமேடு காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சாலையோரம் இறந்துகிடந்த டோமினிக் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், மரியானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தனியார் நிறுவன பணியாளர் தூக்கிட்டுத் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details