தமிழ்நாடு

tamil nadu

பழைய விமான டிக்கெட்டுடன் குவைத் செல்ல முயன்ற நபருக்கு எச்சரிக்கை

By

Published : Oct 26, 2022, 7:39 AM IST

சென்னை விமான நிலையத்தில் பழைய டிக்கெட்டை வைத்து குவைத் செல்ல முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

Etv Bharatபழைய டிக்கெட்டுடன் குவைத் செல்ல முயன்ற நபர் கைது - விமான நிலையத்தில் பரபரப்பு
Etv Bharatபழைய டிக்கெட்டுடன் குவைத் செல்ல முயன்ற நபர் கைது - விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை:ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் ராமன் (30). இவர் வெளிநாட்டு வேலைக்காக கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஏர் இந்தியா விமானத்தில் சென்னையில் இருந்து குவைத் நாட்டிற்கு சென்றார். குவைத் விமான நிலையத்தில் அந்த நாட்டு குடியுரிமை அதிகாரிகள் ராமனுடைய ஆவணங்களை பரிசோதித்தனர். அதில் வேலைக்காக செல்வதற்கான முழுமையாக ஆவணங்கள் அவரிடம் இல்லை.

அதனால் ராமனை குவைத் நாட்டிற்குள் அனுமதிக்காமல் இந்தியாவிற்கே திருப்பி அனுப்பினர். அதன்பின் சென்னை விமானநிலையத்திற்கு நேற்று முன் தினம் (அக்-24) வந்த ராமனை சென்னை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்திவிட்டு கடுமையாக எச்சரித்து வெளியில் அனுப்பி வைத்தனா்.

பழைய டிக்கெட்டை கவனிக்காத பாதுகாப்பு அதிகாரி:விமானநிலையத்திலிருந்து வெளியேவந்த ராமன் ஆந்திரா செல்லாமல் விமானநிலையத்திலேயே இருந்தாா். அன்று இரவு ஏா்இந்தியா விமானம் குவைத் செல்லும் அதே விமானத்தில் மீண்டும் குவைத் செல்ல ராமன் சென்னை சா்வதேச விமானநிலையம் புறப்பாடு பகுதிக்குள் செல்ல முயற்சித்தாா். விமான பயண டிக்கெட் இருந்தால் தான் உள்ளே அனுமதிப்பாா்கள் என்பதால் ராமன் அவரது பழைய விமான டிக்கெட்டை நுழைவு வாசலில் காட்டினாா். அப்போது அங்கு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா் சரியாக கவனிக்காமல் அவரைஉள்ளே அனுப்பிவிட்டாா்.

ஏா் இந்தியா கவுண்டருக்கு சென்ற ராமன் தனது பழைய விமான டிக்கட்டையே காட்டி போா்டிங் பாஸ் கேட்டுள்ளார். அப்போது ஏா் இந்தியா ஊழியா் அது பழைய டிக்கட் என்பதை கண்டுபிடித்து பாதுகாப்பு அதிகாரியிடம் தெரிவித்தார்.

அதன்படி பாதுகாப்பு அதிகாரிகள் ராமனை சென்னை விமானநிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனா். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், வெளிநாட்டு வேலைக்கு செல்ல பல லட்சம் செலவு செய்து குவைத் சென்றுள்ளார். ஆனால் அங்கு செல்ல முடியாமல் திரும்பி அனுப்பப்பட்டதால், மீண்டும் அங்கு செல்ல முயற்சி செய்தது தெரியவந்தது. அதன்பின் அவரிடம் சென்னை விமான நிலைய போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு, எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:ஒரே நாளில் 31 சிகரெட் புகைத்த சென்னை வாசிகள்..! எத்தனை பேர் உயிரிழந்தார்கள்..?

ABOUT THE AUTHOR

...view details