தமிழ்நாடு

tamil nadu

தனியார் வங்கியில் நகை கொள்ளையடித்த வழக்கில் கைதானவரின் குண்டர் சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம்

By

Published : Apr 12, 2023, 10:03 AM IST

தனியார் தங்க நகைக்கடன் வங்கியில் 31 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யபட்ட பாலாஜியின் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கியின் துணை நிறுவனமான நகைக்கடன் வழங்கும் ஃபெட் பேங்க் பினான்ஸ் சர்வீஸ் லிட்லில் அடமானம் வைத்த 481 நபர்களின் சுமார் 31கிலோ 700 கிராம் தங்க நகைகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி கொள்ளையடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 11 கோடி ரூபாய் எனத் தெரிகிறது. இந்த கொள்ளை குறித்து அரும்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில் அதே வங்கியில் மண்டல மேலாளராக பணியாற்றிய முருகன் தனது கூட்டாளிகள் பாலாஜி, சந்தோஷ்குமார் ஆகியோருடன் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளான சூர்யா, சந்தோஷ்குமார், சந்தோஷ் குமார் உறவினரான அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ், பாலாஜி, செந்தில்குமார் மற்றும் கோவையைச் சேர்ந்த நகை பட்டறை உரிமையாளர் ஸ்ரீவத்சன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

கைதான சந்தோஷின் உறவினரான அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் கொள்ளை போன நகைகளில் 3.5 கிலோ நகைகளை அவரின் வீட்டில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. செந்தில்குமாரின் நண்பரான கோவையைச் சேர்ந்த நகை பட்டறை உரிமையாளர் ஸ்ரீவத்சன் கொள்ளை அடித்த நகையை உருக்க உதவி புரிந்துள்ளார்.

இந்நிலையில் முருகன், பாலாஜி, சந்தோஷ் குமார், சூரியா, செந்தில்குமார், ஸ்ரீவத்சன் உள்ளிட்ட 6 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சம்மந்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் சார்பில் தனித்தனியாக உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யபட்டது.

இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் முன் பின்பற்ற பட வேண்டிய விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கவில்லை என வாதிட்டனர்.

இதனையடுத்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கபட்ட பாலாஜிக்கு எதிரான உத்தரவில் பின்பற்ற வேண்டி ஆவணங்கள் முறையாக இணைக்கவில்லை என்பதால் அவருக்கு எதிரான குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாகவும் மற்றவர்களின் வழக்கை வரும் திங்கள்கிழமைக்கு (ஏப்ரல் 17 தேதி) தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: கலாஷேத்ரா விவகாரத்தில் விசாரணையை தொடங்கியது மாநில மனித உரிமைகள் ஆணையம்!

ABOUT THE AUTHOR

...view details