தமிழ்நாடு

tamil nadu

அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் மீது தாமாக விசாரணைக்கு எடுத்த வழக்கு தள்ளி வைப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 6:57 AM IST

Minister Ponmudi: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து மறு ஆய்வுக்கு எடுத்த வழக்கின் விசாரணையை, நவம்பர் மாதத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் மீது தாமாக விசாரணைக்கு எடுத்த வழக்கு தள்ளி வைப்பு!
அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் மீது தாமாக விசாரணைக்கு எடுத்த வழக்கு தள்ளி வைப்பு!

சென்னை: கடந்த 1996 - 2001ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் 1 கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிராக 2002ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சி காலத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, விழுப்புரம் நீதிமன்றத்திலிருந்து மாற்றப்பட்ட இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து மறு ஆய்வு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, லஞ்ச ஒழிப்புத் துறை, பொன்முடி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதால், இந்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (அக்.19) விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி, வேலூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மொழிபெயர்க்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், இந்த மாத இறுதியில் விசாரணைக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து, வழக்கின் விசாரணையை நவம்பர் 3ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

இதையும் படிங்க:மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்: அரசியல் தலைவர்கள் இரங்கல்!

ABOUT THE AUTHOR

...view details