தமிழ்நாடு

tamil nadu

அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு : தப்புமா ஓபிஎஸ், இபிஎஸ் பதவி ?

By

Published : Mar 24, 2022, 8:24 AM IST

அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து முன்னாள் எம்.பி - கே.சி.பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான இறுதி விசாரணையை மார்ச் 30ம் தேதிக்குத் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

madras-high-court-adjourned-admk-inter-party-election-case-for-final-hearingஅதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு : தப்புமா ஓபிஎஸ், இபிஎஸ் பதவி ?
madras-high-court-adjourned-admk-inter-party-election-case-for-final-hearing அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு : தப்புமா ஓபிஎஸ், இபிஎஸ் பதவி ?

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தலுக்குத் தடை விதிக்க கோரி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாத பழனிச்சாமி இந்த வழக்கைத் தாக்கல் செய்ய எந்த அடிப்படை உரிமையும் இல்லை, கட்சி நிர்வாகிகளைத் துன்புறுத்தும் நோக்கில் அற்ப காரணங்களுக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். கட்சி உறுப்பினராக இல்லாத நபர், கட்சியின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்ப முடியாது எனவும், கட்சி நலனுக்கு எதிராகச் செயல்பட்டதால் வெளியேற்றப்பட்ட பழனிச்சாமி தாக்கல் செய்துள்ள இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றம்

இதற்கு பதிலளித்து கே.சி.பழனிச்சாமி தாக்கல் செய்த பதில் மனுவில், கட்சியில் இருந்து தன்னை நீக்கியபோது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காததால், தன்னை நீக்கியதே சட்டவிரோதம் என்பதால், இந்த வழக்கைத் தாக்கல் செய்ய தனக்கு அடிப்படை உரிமை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


கட்சியின் செயல்பாடுகளைத் தடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்ததாக அதிமுக கூறியுள்ளது தவறு எனவும், சக உறுப்பினர்களின் எண்ணத்தையே பிரதிபலித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு எதிராகத் தான் தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு

இதனிடையே, தேர்தல் தொடர்பான வழக்கை நிராகரிக்கக் கோரிய மனு மீதான இறுதி விசாரணையை நீதிபதி வேல்முருகன் மார்ச் 30 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.

இதையும் படிங்க: 'இனி டாக்டர்.மு.க.ஸ்டாலின்...!' கௌரவ டாக்டர் பட்டம் பெற துபாய் செல்லும் முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details