தமிழ்நாடு

tamil nadu

நோய் முற்றிய பிறகு மருத்துவமனைக்கு செல்லக்கூடாது - மா.சுப்பிரமணியன் அறிவுரை!

By

Published : Jun 16, 2022, 10:25 PM IST

கரோனா நோய்த் தொற்றுடன் வீட்டிலேயே இருந்து கொண்டு, நோய் முற்றிய பிறகு மருத்துவமனைக்கு செல்லக்கூடாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நோய் முற்றிய பிறகு மருத்துவமனைக்கு செல்லக்கூடாது - மா.சுப்பிரமணியன் அறிவுரை!
நோய் முற்றிய பிறகு மருத்துவமனைக்கு செல்லக்கூடாது - மா.சுப்பிரமணியன் அறிவுரை!

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இன்று (ஜூன் 16) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பரமணியன், குரோம்பேட்டை அரசு காசநோய் மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ள 100 படுக்கை வசதி கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கரோனா தொற்றின் எண்ணிக்கை பரவலாக அதிகரிக்கத் தொடங்கியுள்ள சூழலில், முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி தொற்று அதிகம் உள்ள இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களுக்கு காய்ச்சல், சளிக்கான அறிகுறிகள், தொண்டை நோய் அல்லது ஏதேனும் புதிதாக உடலில் மாற்றம் ஏற்படும்போது உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று ஆலோசனை பெற வேண்டும்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

வீட்டிலேயே இருந்து நோய் முற்றிய பிறகு மருத்துவமனைக்குச் செல்ல கூடாது. ஏற்கனவே தடுப்பூசி செலுத்தியிருந்தாலும், 10 மாதங்கள் மட்டும்தான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். எனவே, பூஸ்டர் தடுப்பூசியை அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டும். அந்த வகையில் தனியார் மருத்துவமனையில் 388 ரூபாய்க்கு குறைந்த விலையில் 19 வயதுக்கு மேல் 69 வயதுக்குள் அனைவரும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

நோய் முற்றிய பிறகு மருத்துவமனைக்கு செல்லக்கூடாது - மா.சுப்பிரமணியன் அறிவுரை!

இதையும் படிங்க:இந்தியாவில் அதிகரிக்கும் கரோனா தொற்று - ஒரே நாளில் 10 ஆயிரத்தைத் தாண்டியது

ABOUT THE AUTHOR

...view details