தமிழ்நாடு

tamil nadu

பரங்கிமலை ரயில் நிலையத்தில் காதல் ஜோடி தற்கொலை!

By

Published : Jan 27, 2023, 6:56 AM IST

Updated : Jan 27, 2023, 2:08 PM IST

பரங்கிமலை ரயில் நிலையம் அருகே காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்றதில் பள்ளி மாணவி நிகழ்விடத்திலேயே மரணமடைந்த நிலையில், காதலன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பரங்கிமலை ரயில் நிலையத்தில் காதல் ஜோடி தற்கொலை!
பரங்கிமலை ரயில் நிலையத்தில் காதல் ஜோடி தற்கொலை!

சென்னை: மடிப்பாக்கம் நாவலர் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன்(20) இவர் மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு தமிழ் படித்து வருகிறார். உள்ளகரம் லேக் வியூ தெருவை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியதாக தெரிகிறது.

பள்ளி மாணவி காதல் விவராகம் பெற்றோருக்கு தெரிவந்ததையடுத்து பெற்றோர்கள் அவரை கண்டித்துள்ளனர். அது மட்டுமின்றி இளங்கோவனிடம் பழகக்கூடாது என்றும் கூறிவந்துள்ளனர். பெற்றோர்களுக்கு தெரியாமல் இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்து வந்துள்ளனர். நேற்று இளங்கோவன் பிறந்தநாள் என்பதால் இருவரும் மாலையில் சந்தித்து பேசி உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு சுமார் எட்டு மணி அளவில் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு அருகே கிண்டியில் இருந்து பரங்கிமலை நோக்கி சென்றுக் கொண்டிருந்த மின்சார ரயில் மீது பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். கல்லூரி மாணவன் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி இருந்ததால் இதை பார்த்த பரங்கிமலை ரயில்வே போலீசார் கல்லூரி மாணவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தற்கொலை தவிர்

பள்ளி மாணவி பிரேதத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆவடி ரயில் நிலையத்தில் பெண் காவலர் உடல் மீட்பு

Last Updated : Jan 27, 2023, 2:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details