தமிழ்நாடு

tamil nadu

பயன்பாட்டு புவியியல் துறையில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

By

Published : Jul 4, 2022, 3:40 PM IST

Updated : Jul 4, 2022, 6:31 PM IST

பயன்பாட்டு புவியியல் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும், போதிய விழிப்புணர்வு இல்லாததால் மாணவர்கள் இத்துறையை தேர்ந்தெடுப்பதில்லை என சென்னை பல்கலைக்கழக புவியியல் துறை தலைவர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பயன்பாட்டு புவியியல் துறை
பயன்பாட்டு புவியியல் துறை

சென்னை:சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பொறுப்பு ஏழுமலை கூறுகையில், "நெதர்லாந்தைச் சேர்ந்த ஜியோலாக் என்னும் சர்வதேச புவியியல் நிறுவனத்துடன் இணைந்து பெட்ரோலியம் புவியியல் ஆய்வு பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. கிண்டியில் உள்ள சென்னை பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் இன்று (ஜூலை 4) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்திய பொருளாதாரமும் உலக பொருளாதாரமும் தற்போதைய நிலையில் எண்ணெய் பொருளாதாரத்தையே நம்பியுள்ளது. இந்தியா முழுவதும் எண்ணெய் தொடர்பான ஆராய்ச்சிகள் இரண்டு வகையாக நடைபெற்று வருகிறது. தனியார் நிறுவனங்கள் தனியாக எண்ணெய் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் அரசாங்கத்திடம் அனுமதி பெற்று சில நிறுவனங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. அரசாங்கத்தின் சார்பிலும் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

பயன்பாட்டு புவியியல் துறையில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்

பல்கலைக்கழகங்களில் நடைபெறும் எண்ணெய் தொடர்பான ஆராய்ச்சிக்கு போதிய நிதி இருப்பதில்லை, அரசாங்கம் கூடுதலாக நிதி ஒதுக்கினால் ஆராய்ச்சி சிறப்பாக நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகத்திலும், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திலும் எண்ணெய் தொடர்பான ஆராய்ச்சியும் புவியியல் சார்ந்த படிப்புகளும் உள்ளது" என தெரிவித்தார்.

மேலும் சென்னை பல்கலைக்கழக புவியியல் துறை தலைவர் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, "பயன்பாட்டு புவியியல் சார்ந்த படிப்புகளை பெரும்பாலும் மாணவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை. ஏனென்றால் ஊரக பகுதிகளில் இருக்கும் மாணவர்களுக்கு இந்த படிப்பு தொடர்பான போதிய விழிப்புணர்வு இல்லை. புவியியல் சார்ந்த துறைகளில் ஏராளமான வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது மாணவர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் - சென்னை மாநகராட்சி

Last Updated : Jul 4, 2022, 6:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details