தமிழ்நாடு

tamil nadu

முன்விரோதம் - பிறந்த நாளன்று லாரி ஓட்டுநர் கத்தியால் குத்திக் கொலை

By

Published : Jun 23, 2021, 7:53 AM IST

சென்னை: பம்மல் அருகே முன்விரோதம் காரணமாக பிறந்தநாளன்று லாரி ஓட்டுநர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேவேந்திரன்
தேவேந்திரன்

சென்னை, பம்மல் அடுத்த அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் தேவேந்திரன் (40). இவர் நேற்று (ஜூன்.22) வீட்டில் தனது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்த போது, வெளியே சிலர் அவரை கேலி கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது .

மதுபோதை ஏற்படுத்திய விபரீதம்

இதனால் ஆத்திரமடைந்த தேவேந்திரன் வெளியே சென்று பார்த்த போது, வேன் ஓட்டுநர் மோகன்ராஜ், தனது சகோதரர்கள் பிரபு, மோகலிங்கம் ஆகியோருடன் அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்தது தெரியவந்தது.

அப்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தில் மோகன்ராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தேவேந்திரனை, சரமாரியாகக் குத்திவிட்டுத் தப்பிச் சென்றார்.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் தேவேந்திரனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் அங்கு சிகிச்சை தொடங்கிய சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார்.

தொடர்ந்து முட்புதரில் தலைமறைவாக இருந்த மோகன்ராஜ் மற்றும் அவரது சகோதரர்களை மடக்கிப் பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், இருதரப்பினருக்கும் இடையே ஏற்கெனவே வீட்டின் அருகே வாகனத்தை நிறுத்துவது குறித்து முன்விரோதம் இருந்ததாகவும், அதனால் தான் கொலை செய்ததாகவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

அதன் அடிப்படையில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை, கைது செய்து சிறையில் அடைக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:நொளம்பூரில் கைகள் கட்டப்பட்டு எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details