தமிழ்நாடு

tamil nadu

ஆள்மாறாட்டம் செய்து நில மோசடி - பாஜக ஆதரவாளர் ஃபாத்திமா அலி கைது!

By

Published : Oct 16, 2022, 5:21 PM IST

ஆள்மாறாட்டம் செய்து நில மோசடியில் ஈடுபட்ட பாஜக ஆதரவாளரும், ராஷ்டிரிய மஞ்ச் அமைப்பின் தலைவருமான ஃபாத்திமா அலி மற்றும் அவரது கூட்டாளியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Land
Land

சென்னை: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மன்னே வெங்கம்மா என்பவர், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனது குடும்பத்துடன் தமிழ்நாட்டில் வசித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு வெங்கம்மா காலமானார்.

அவரது பூர்வீக சொத்தான 4,000 சதுர அடி நிலம் மடிப்பாக்கத்தில் உள்ளது. இந்த நிலையில், ராஷ்ட்ரிய மன்ச் அமைப்பின் தலைவர் ஃபாத்திமா அலி, சக்தி லிங்கம் ஆகிய இருவரும், மன்னே வெங்கம்மா உயிரோடு இருப்பது போல் ஆள்மாறாட்டம் செய்து, அவரது நிலத்தை ஜோதி என்ற பெயரில் மோசடியாகப் பதிவு செய்துள்ளனர். பிறகு அந்த 4,000 சதுர அடி நிலத்தில், 1,600 சதுர அடி நிலத்தை வினோத் என்பவருக்கு 70 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.

இதனிடையே மறைந்த வெங்கம்மாவின் மகன் சென்னையில் உள்ள சொத்து குறித்து விசாரித்தபோது, அந்த நிலம் போலியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டு கைமாறி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், ராஷ்ட்ரிய மஞ்ச் அமைப்பின் தலைவர் ஃபாத்திமா அலி மற்றும் போலியாக ஆவணம் தயாரிக்க உதவியதாக அவரது கூட்டாளி சக்தி லிங்கம் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: வெடி மருந்துகளுடன் பிடிப்பட்ட இலங்கை தமிழர்கள் குற்றவாளி என தீர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details