தமிழ்நாடு

tamil nadu

உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

By

Published : Aug 9, 2021, 5:50 PM IST

Updated : Aug 9, 2021, 8:35 PM IST

தமிழ்நாட்டில் விளையாட்டை மேம்படுத்த அரசு பள்ளியில் போதிய எண்ணிக்கையில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

உடற்கல்விக்கு முக்கியத்துவம் இல்லை
உடற்கல்விக்கு முக்கியத்துவம் இல்லை

சென்னை: பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமாரை உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குநர் சங்கத்தின் மாநில தலைவர் தேவிசெல்வம் சந்தித்து மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 40 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் 6 ஆயிரம் உடற்கல்வி ஆசிரியர்கள் மட்டுமே பணியில் இருக்கின்றனர். 100 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும் என்ற நிலையில் 500 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அளவில் மட்டுமே உள்ளனர்.

உடற்கல்விக்கு முக்கியத்துவம் இல்லை

உடற்கல்வி ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதால் மாணவர்களுடைய விளையாட்டு திறனை முழுமையாக பயன்படுத்த இயலவில்லை. விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை போதுமான அளவில் அரசு நிரப்ப வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:மீராமிதுனை கைது செய்ய வேண்டும் - வன்னியரசு வலியுறுத்தல்

Last Updated : Aug 9, 2021, 8:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details