தமிழ்நாடு

tamil nadu

இந்தியன் பனோராமாவில் “கிடா” திரைப்படம் தேர்வு

By

Published : Oct 23, 2022, 12:51 PM IST

கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்படவிழாவில் இந்தியன் பனோராமா பிரிவில் “கிடா” எனும் தமிழ் படம் தேர்வாகி அசத்தியுள்ளது.

இந்தியன் பனோராமாவில் ஜெய் பீம் படத்துடன் “கிடா” திரைப்படம் தேர்வு
இந்தியன் பனோராமாவில் ஜெய் பீம் படத்துடன் “கிடா” திரைப்படம் தேர்வு

சென்னை:இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்ட படங்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பிரிவில், “கிடா” எனும் தமிழ் படம் தேர்வாகி அசத்தியுள்ளது. ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடித்து உருவாகிய திரைப்படம் “கிடா”.

மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் உள்ள உறவுப் பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியது. இப்படம் முழுதாக முடிந்தவடைந்த நிலையில், திரைக்கு வரும் முன்னதாகவே கோவா திரைப்பட விழாவிற்கு தேர்வாகி அசத்தியுள்ளது. கோவா திரைப்படவிழாவில் இந்தியன் பனோராமா பிரிவில் மூன்று தமிழ்ப் படங்களில், ஒரு படமாக கிடா திரைப்படம் தேர்வாகியுள்ளது.

தமிழர்களின் வாழ்வியலை அச்சு அசலாக திரையில் வடிக்கும், ஒரு மாறுபட்ட காவியமாக இப்படம் உருவாகியுள்ளது. புதுமுகங்களின் முயற்சியில் உருவாகியுள்ள இப்படத்தை “கிருமி, ரெக்க” படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த இயக்குநர் ரா.வெங்கட் இயக்கியுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் 35 வருடங்களாக பல வெற்றிப்படங்களை தந்த ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தில் மறைந்த பூ ராமு, காளிவெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய்பீம், ஆர்ஆர்ஆர், தி காஷ்மீர் பைல்ஸ்

ABOUT THE AUTHOR

...view details