தமிழ்நாடு

tamil nadu

நாடாளுமன்ற கூட்டணி குறித்து சூசகமாக பதிலளித்த கமல்ஹாசன் - வெளியான முக்கிய தகவல்

By

Published : Dec 18, 2022, 4:25 PM IST

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் டிசம்பர் 24இல் பங்கேற்க உள்ளார்.

ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன்
ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன்

சென்னை:மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சுமார் 100 பேர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், “இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. பூத் கமிட்டி தொடர்பாகவும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகள் குறித்தும் ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டது.

கூட்டணி தொடர்பாக நாங்கள் எந்த திசையில் பயணிக்கிறோம் என்று புரிய வரும். என் பயணத்தை தெரிந்துகொண்டாலே அது உங்களுக்குத்தெரிய வரும். ஓரிரு வாரங்களில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். ஆவின் விலை ஏற்றம் ஏற்புடையது அல்ல” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து காவி ஆடை தொடர்பாக சர்ச்சை எழுந்து வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த கமல், “அது நம்ம அரசியல் இல்லை” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் மௌரியா, ’வருகின்ற 24-ஆம் தேதி ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்திய ஒற்றுமை பயணத்தில் டெல்லியில் கமல்ஹாசன் கலந்து கொள்கிறார். ஜனநாயகத்தைக் காக்க இந்த பயணத்தில் கலந்து கொள்கிறார்” எனத் தெரிவித்தார்

இதையும் படிங்க: "வடகிழக்கு மாநிலங்களில் ஊழல், வன்முறைக்கு ரெட் கார்டு காட்டியுள்ளோம்" - பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details