தமிழ்நாடு

tamil nadu

கரோனா பாதிப்பு: தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி வழங்கிய நீதிபதி

By

Published : Mar 21, 2020, 1:02 PM IST

சென்னை: கோவிட் 19 வைரஸ் பெருந்தொற்று பரவுதலால், வருவாய் இழந்து பாதிக்கப்படும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலனுக்காக உயர்நீதிமன்ற நீதிபதி ஒருமாத ஊதியத்தை வழங்கினார்.

உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்
உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்

கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்று நோய் பரவல் மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் கடுமையான வீழ்ச்சியை மத்திய, மாநில அரசுகள் சரிசெய்ய முயற்சித்து வருகின்றன.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தனது ஒருமாத ஊதியத்தை, அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலனுக்காக அளிக்க முன்வந்துள்ளார். இதையடுத்து, தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சண்முகத்தை நேரில் சந்தித்து, 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

பாதிப்புக்குள்ளாகும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிரந்தர ஊதியம் பெறுபவர்கள் உதவி செய்ய வேண்டும் எனவும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல் - உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்கா மூடல்!

ABOUT THE AUTHOR

...view details