தமிழ்நாடு

tamil nadu

சவுதி அரேபியாவில் மருத்துவர் வேலை; தமிழ்நாடு அரசு தகவல்!

By

Published : Aug 2, 2019, 11:45 PM IST

சென்னை: சவுதி அரேபியாவில் பணிபுரிய விருப்பமுள்ள மருத்துவர்கள், விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவில் மருத்துவர் வேலை

சவுதி அரேபியாவில் பணிபுரிய விருப்பமுள்ள மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

  • சவுதி அரேபியா அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய இரண்டு வருட பணி அனுபவம் கொண்ட மருத்துவர்களுக்கு (கன்சல்டன்ட், சிறப்பு மருத்துவர்கள்) நேர்முகத் தேர்வு நடக்க உள்ளது. 55 வயதுக்கு உட்பட்டவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.
  • தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு சம்பளம் சவுதி அரசால் நிர்ணயிக்கப்படும். இது தவிர இலவச விமான டிக்கெட், உணவு, இருப்பிடம், குடும்ப விசா, மருத்துவ சலுகை, 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய வருடாந்திர விடுப்பு ஆகியவை சட்டங்களுக்கு உட்பட்டு வழங்கப்படும்.
  • தகுதியுள்ள மருத்துவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி தகுதி, அனுபவம், பாஸ்போர்ட், ஆதார் நகல் மற்றும் வெள்ளை நிற பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் ovemcldr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 26, 27 ஆகிய தேதியில் கொச்சியிலும், 29, 30 ஆகிய தேதியில் டெல்லியிலும், செப்டம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் மும்பையிலும் நடக்கும்.
  • மேலும் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைத்தளம் மூலமாகவும், 044-22505886 / 22502267 / 8220634389 / 9566239685 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:சவூதி அரேபியாவில் மருத்துவர் வேலைக்கு அழைப்பு

சென்னை: சவூதி அரேபியாவில் பணிபுரிய விருப்பமுள்ள மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

சவூதி அரேபியா அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய 2 வருட பணி அனுபவம் கொண்ட மருத்துவர்களுக்கு (கன்சல்டன்ட், சிறப்பு மருத்துவர்கள்) நேர்முக தேர்வு நடக்க உள்ளது. 55 வயதுக்கு உட்பட்டவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு சம்பளம் சவூதி அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படும். இது தவிர இலவச விமான டிக்கட், உணவு, இருப்பிடம், குடும்ப விசா, மருத்துவ சலுகை, 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய வருடாந்திர விடுப்பு ஆகியவை சட்டங்களுக்கு உட்பட்டு வழங்கப்படும். தகுதியுள்ள மருத்துவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி தகுதி, அனுபவம், பாஸ்போர்ட், ஆதார் நகல் மற்றும் வெள்ளை நிற பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் ovemcldr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். நேர்முக தேர்வு ஆகஸ்ட் 26, 27 ஆம் தேதியில் கொச்சியிலும், 29, 30 ஆம் தேதியில் புது தில்லியிலும், செப்டம்பர் 1, 2 மும்பையிலும் நடக்கும். மேலும் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைத்தளம் மூலமாகவும், 044-22505886 / 22502267 / 8220634389 / 9566239685 என்ற தொலைபேசி எண்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Conclusion:

ABOUT THE AUTHOR

...view details