தமிழ்நாடு

tamil nadu

'ஆஸ்கார் விருது பெறுவதற்கான முழுத் தகுதியும் ஜெய் பீம் படத்திற்கு உள்ளது' - முத்தரசன்

By

Published : Nov 19, 2021, 10:32 PM IST

ஆஸ்கார் விருது பெறுவதற்கான முழுத் தகுதியும் ஜெய் பீம் படத்திற்கு உள்ளது. ஜெய் பீம் படம் ஒரு நல்ல படம், எந்தச் சமூகத்தையும் இந்தப் படம் புண் படுத்தவில்லை, தவறான முறையை பாமக கையாளுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

ஜெய் பீம் படம் , முத்தரசன்
ஜெய் பீம் படம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தி.நகர் பாலன் இல்லத்தில் இன்று (நவ.19) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என ஓர் ஆண்டுகாலமாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஒரு தவறான சட்டத்தைத் திரும்பப் பெறப் பிரதமருக்கு ஓராண்டு ஆகிவிட்டது. எந்தநோக்கத்திற்காக இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தார் எனப் பிரதமருக்குத் தெரியும். இந்தச் சட்டத்தின் மூலமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகப் பிரதமர் செயல்படுகிறார். விவசாயிகள் இந்த மண்ணை விட்டு வெளியேற இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.

மக்களுக்குப் பிரதமர் மீது நம்பிக்கை இல்லை

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றதன் மூலம் சர்வாதிகாரம் தோற்றுவிற்றது. ஜனநாயகம் வெற்றிபெற்றுவிட்டது. மக்களுக்குப் பிரதமர் மீது நம்பிக்கையில்லை என்பதால் தான் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றதை விவசாயிகள் நாடு முழுவதும் இனிப்பு கொடுத்துக் கொண்டாடி வருகின்றனர்.

முத்தரசன்

மோடி என்ன சொல்கிறாரோ

எந்தவிதத்திலும் வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற்றதன் மூலமாக பாஜகவிற்கு மக்கள் ஆதரவு கிடைக்காது. சரிவை நோக்கி பாஜக சென்று கொண்டுள்ளது.

மோடி என்ன சொல்கிறாரோ அதைக் கேட்க வேண்டும் என்ற நிலையில் அதிமுக தலைவர்கள் உள்ளார்கள். அதிமுக அரசு இந்தச் சட்டத்திற்கு ஆதரவு அளித்தது.
நிவாரண தொகை போதுமானது அல்ல

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய நிவாரண தொகை போதுமானது இல்லை. விவசாயம், கால்நடைகள் போன்றவை மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

பாமக தவறான முறையை கையாளுகிறது

ஜெய் பீம் படம்
ஜெய் பீம் படம் ஒரு நல்ல படம், எந்தச் சமூகத்தையும் இந்தப் படம் புண் படுத்தவில்லை எனத் தெரிவித்தார். மேலும், தவறான முறையை பாமக கையாளுகிறது எனவும் தெரிவித்தார்.

மிரட்டல் விடுவது ஜனநாயகம் அல்ல

ஜெய் பீம் படம்

இந்தப் படத்தைக் குறை கூறுவதும், படக்குழுவினரைக் கொச்சையாகப் பேசுவதும், மிரட்டல் விடுவதும் ஜனநாயகம் அல்ல. ஆஸ்கார் விருது பெறுவதற்கான முழு தகுதியும் ஜெய் பீம் படத்திற்கு உள்ளது” என்றார்.

இதையும் படிங்க:Jaibhim Movie: 'ஜெய்பீம் பிரச்னைக்குத் தீர்வு எங்கள் கைகளில் இல்லை' - இயக்குநர் பாரதிராஜவுக்கு அன்புமணி கடிதம்

ABOUT THE AUTHOR

...view details