தமிழ்நாடு

tamil nadu

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள்: தொலைபேசி மூலம் தகவல்கள் அறியும் மாநகராட்சி!

By

Published : May 30, 2021, 9:06 AM IST

சென்னை: வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளுக்குத் தொலைபேசி மூலம் உடல்நிலை குறித்து தகவல்கள் பெறப்பட்டு வருவதாக, சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Isolated patients at home: the corporation that knows information by phone!
Isolated patients at home: the corporation that knows information by phone!

கரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களின் உடல்நிலை குறித்து, நாள்தோறும் தொடர்ந்து கண்காணிக்கவும், தனிமையின் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்திற்கு ஆலோசனை வழங்கவும், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மண்டல அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அங்குப் பயிற்சி மருத்துவர்கள் மூலமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மே 13 ஆம் தேதி முதல் மே 27ஆம் தேதி வரை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு மண்டல கட்டுப்பாட்டு அறைகளிலிருந்து பயிற்சி மருத்துவர்களின் வாயிலாக, 5 லட்சத்து 80 ஆயிரத்து 418 தொலைபேசி அழைப்புகளின் மூலம் உடல்நிலை குறித்து தகவல்கள் பெறப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதில் தொடர்ந்து 5 நாள்களுக்கு காய்ச்சல் இருந்த ஆயிரத்து 227 நபர்களுக்கும், சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாக அறியப்பட்ட 360 நபர்களுக்கும் மருத்துவமனைகளில் மேல் சிகிச்சைப் பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தொலைபேசி வாயிலாக அழைக்கப்பட்டு உடல்நிலை குறித்து விவரம் கேட்கப்பட்ட நபர்களில், 165 நபர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், உடல்நிலையில் சிரமங்கள் இருப்பதாகத் தெரிவித்த 260 நபர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு, அடுத்தக்கட்ட சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details