தமிழ்நாடு

tamil nadu

'தமிழக அரசு சிறுபான்மையினருக்காக செயல்படுகிறது' - காடேஸ்வரா சுப்பிரமணியம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2023, 8:03 PM IST

Updated : Sep 23, 2023, 10:19 PM IST

Indhu Munnani: விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழாவை முன்னிட்டு சென்னை சென்ற இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு அரசு விநாயகர் சதுர்த்தி விழாவை தடுக்கிறது என்றும் சிறுபான்மையினருக்காக செயல்படுகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

இந்து முன்னணி செயலாளர் மனோகர் குற்றச்சாட்டு
இந்து முன்னணி செயலாளர் மனோகர் குற்றச்சாட்டு

இந்து முன்னணி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை:சென்னையில் கடந்த திங்கள்கிழமை அன்று(செப்.18) விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாப்பட்டது. மேலும் சென்னையில் பல்வேறு இடங்களில் 5 ஆயிரம் சிலைகளுக்கு மேல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 7-ஆம் நாளான நாளை (செப்.24) விநாயகர் சிலைகளை கரைக்க தமிழக காவல் துறை அனுமதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழா, இந்து முன்னனி சார்பிலும் கொண்டாப்பட உள்ளது.

இதற்காக இன்று (செப்.23) காலை கோவையில் இருந்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் சென்னைக்கு வந்தார். அதைத்தொடர்ந்து மாநிலச் செயலாளர் மனோகர், சென்னை சிந்தாரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னிலை தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, "இந்து முன்னனி சார்பில் கடந்த 40 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர காலத்த்தில், பாலகங்காதர் திலக், விநாயகர் சதுர்த்தி விழாவைை ஆரம்பித்தார். தமிழகத்தில், வேறுபாடுகளை தவிர்க்கவே விநாயகர் சதுர்த்தி கொண்டாப்படுகிறது. தமிழகத்தில் தோராயமாக 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று சிலைகள் கரைக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளை (செப்.24) இந்த விநாயகர் சிலை கரைக்கப்படும். விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழாவைத் தடுபதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் அவர்கள் (திமுக) எடுத்து வருகிறார்கள். அரசு அதிகாரிகள் மூலம் சிலைகளை வைக்கக் கூடாது என்று தமிழக அரசு கூறியிருக்கிறது. இந்துக்கள் ஒற்றுமையாகவே இருக்கக்கூடாது என்பது, இந்த அரசின் நோக்கமாக இருந்து வருகிறது" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஒவ்வொறு ஆண்டும் திமுக, அதிமுக அரசு யாராக இருந்தாலும், தன் எதிர்ப்புகளை காண்பித்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், இந்த முறை தமிழ்நாடு ஆளும் திமுக அரசு அதிகமாக தன் வெறுப்பை காண்பித்துள்ளது. மேலும், பல தடைகளை மீறி இந்த விநாயகர் சதுர்த்தி நடந்து கொண்டிருக்கிறது.

தற்போது தமிழ்நாடு அரசு திப்பு சுல்தான் அரசுபோல் இருக்கிறது. கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், ஏன் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறவில்லை?" என்றார்.

இதையும் படிங்க:"மகளிர் இட ஒதுக்கீடு" பிரதமர் மோடி அரசின் வரலாற்று சாதனை - வானதி சீனிவாசன் பெருமிதம்!

Last Updated :Sep 23, 2023, 10:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details