தமிழ்நாடு

tamil nadu

அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத் தொகை அறிவித்தது தமிழக அரசு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 10:44 PM IST

TN transport workers incentive: பொங்கல் திருநாளை முன்னிட்டு 2023ஆம் ஆண்டில் போக்குவரத்து ஊழியர்களுக்கான சாதனை ஊக்கத் தொகையை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வெளியிடூ
அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வெளியிடூ

சென்னை:தமிழக போக்குவரத்து ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி 9ம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். அதன்படி பெரும்பாலான ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசு அரசு பேருந்து ஊழியர்களுக்கான சாதனை ஊக்கத்தொகை தொடர்பான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், “தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையைப் பொதுமக்களுக்கு அளிப்பதில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தான் பயணிகள் அடர்வு, பேருந்து பயன்பாடு, எரிபொருள் செயல்திறன் ஆகியவற்றில் உயர்ந்து விளங்குகின்றன.

குக்கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி, போக்குவரத்து சேவை அளிக்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகிய அனைத்து நிறுவனங்களிலும் தற்போது சுமார் ஒரு இலட்சம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும், பணியாளர்களில், 2023-ஆம் ஆண்டில் 91 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், ஆனால் 151 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 85 ரூபாய் வீதமும்; 151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஆனால் 200 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 195 ரூபாய் வீதமும், 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 625 ரூபாய் வீதமும் பொங்கல் “சாதனை ஊக்கத் தொகை” வழங்கப்படும்.

இந்த உத்தரவின்படி, அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 675 போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூபாய் 6 கோடியே 75 லட்சத்து 73 ஆயிரம் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும்” என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:நெல்லை மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மான விவகாரம்.. சுற்றுலா செல்லும் கவுன்சிலர்கள்..? வாக்கெடுப்பு நடக்குமா? நெல்லையில் நடப்பது என்ன?

ABOUT THE AUTHOR

...view details