தமிழ்நாடு

tamil nadu

இல்லம் தேடிக் கல்வித் திட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு

By

Published : Dec 8, 2021, 10:38 PM IST

சென்னையில் இல்லம் தேடிக் கல்வித்திட்டத்தின் செயல்பாடு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு

சென்னை: கரோனா தொற்றின் காரணமாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் சுமார் 600 நாள்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. குறிப்பாக 1-ம் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமலேயே 3-ம் வகுப்பிற்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதனால் மாணவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு கிடைப்பதில் சிக்கல் இருந்து வருகிறது. கற்றலில் ஏற்பட்ட இடைவெளியை குறைப்பதற்காக இல்லம் தேடி கல்வித் திட்டத்தை, விழுப்புரம் மாவட்டம் முதலியார் குப்பம் கிராமத்தில் அக்டோபர் 27-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு

இந்த நிலையில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் செயல்பாடு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அந்தவகையில் சென்னையில் மாணவர்கள் கல்வி கற்கும் முறையையும், தன்னார்வலர்கள் பாடம் நடத்தும் விதத்தையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார்.

மேலும் மாணவர்கள் விரும்பும் விதத்தில் திட்டம் செயல்படுகிறதா? என்பதையும் அவர் உறுதிபடுத்தினார்.

இதையும் படிங்க:HelicopterCrash நேரடியாக விபத்தை பார்த்தவர்கள் பேட்டி

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details