தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் ஹெலிகாப்டர் மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்கிய இந்திய விமானப்படை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2023, 1:44 PM IST

IAF: சென்னையில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் ஒன்றான மடிப்பாக்கத்தில் இந்திய விமானப் படையினர், ஹெலிகாப்டர் மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.

Delivery of relief goods by helicopter
ஹெலிகாப்டர் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்

சென்னை:வங்கக் கடலில் கடந்த நவம்பர் 27ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது. மிக்ஜாம் என பெயரிடப்பட்ட இந்த புயலால், சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

இதன் காரணமாக பல சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்து கிடந்ததாலும், வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதுமட்டுமல்லாது ரயில் சேவை முற்றிலும் முடங்கியது. மேலும் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்ததால் நகரின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

புயல் தாக்கத்தால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டும் வருகிறது. இருப்பினும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மடிப்பாக்கம் பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கி இருக்கும் பொதுமக்களுக்கு, இந்திய விமானப்படையினர், ஹெலிகாப்டர் மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.

இதையும் படிங்க:மழை நின்று மூன்று நாட்களாகியும் மடிப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளில் வெளியேறாத வெள்ள நீர்!

ABOUT THE AUTHOR

...view details