தமிழ்நாடு

tamil nadu

ஆசிரமத்துக்கு சென்ற மனைவி - கட்டையால் அடித்து கொலை செய்த கணவன்

By

Published : Oct 10, 2021, 11:12 AM IST

சென்னையில் அடிக்கடி ஆசிரமத்துக்கு சென்ற மனைவியை, கணவன் கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார்.

murder news  murder issue  murder  chennai murder case  husband and wife problem  husband arrested by police for murder his wife  husband murdered his wife  மனைவிகயை கொன்ற கணவன்  கொலை வழக்கு  கொலை  சென்னை ஆவடியில் மனைவியை கொன்ற கணவன்
மனைவியை கொன்ற கணவன்

சென்னை:ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் சந்திர மோகன் (49). இவர் சென்னை துறைமுகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்தார். செல்வி அடிக்கடி கோயில்களுக்கு சென்று விடுவதால் வீட்டில் உள்ள வேலைகளை சரியாக கவனிக்காமல் இருந்துள்ளார். இதனால் தம்பதி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் அக்டோபர் 7 ஆம் தேதி அன்று, செல்வி விழுப்புரத்தில் உள்ள ஆசிரமத்துக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார. இதுபற்றி கணவன் கேட்ட போது வாக்குவாதம் நடந்துள்ளது. இதனால் கோபம் அடைந்த சந்திரமோகன் வீட்டில் கிடந்த கட்டையை எடுத்து செல்வியின் தலையில் சரமாரி தாக்கி உள்ளார்.

மனைவி உயிரிழப்பு

ரத்தம் கொட்டிய நிலையில் நின்றிருந்த செல்வி நேராக வீட்டின் அருகே உள்ள குபேர ஈஸ்வரர் கோயிலுக்கு சென்று மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்ததும் அப்பகுதியினர் உடனடியாக சந்திரமோகனுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் செல்வியை மீட்டு திருநின்றவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு செல்விக்கு முதலுதவி சிகிச்சை அளித்து விட்டு அங்கிருந்து நள்ளிரவு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே செல்வி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருநின்றவூர் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர், சந்திரமோகம் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் செல்வியின் உடலை உடற்கூராய்விற்காக வைத்தனர்.

இதையும் படிங்க: மனைவி குடும்பத்தார் தொல்லை - திமுக பிரமுகர் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details