தமிழ்நாடு

tamil nadu

கனமழை எச்சரிக்கை: 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு!

By

Published : Nov 10, 2022, 8:01 PM IST

இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நவம்பர் 11-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை  பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு!
கனமழை எச்சரிக்கை பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு!

சென்னை: வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று(நவ.10) தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் சற்று வலுப்பெற்று தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நவம்பர் 10 முதல் 12-ம் தேதிகளில் நகரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களுக்கு நவம்பர் 11-ம் தேதி கனமழைக்கான ரெட் அலர்ட்(Red alert) விடுக்கப்பட்டுள்ளது. இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அம்மாவட்டத்தின் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:’தமிழ்நாட்டில் விவசாயத்திற்குப்போதுமான உரங்கள் கையிருப்பில் உள்ளன'

ABOUT THE AUTHOR

...view details