தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 6:36 PM IST

Tamil Nadu Rains: கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது

சென்னை வானிலை மையம்
சென்னை வானிலை மையம்

சென்னை:தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை(அக்.12) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று தமிழ்நாட்டில், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விபரம்: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, களியல் (கன்னியாகுமரி), பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி), காட்பாடி (வேலூர்), திற்பரப்பு (கன்னியாகுமரி) ஆகிய இடங்களில், தலா 7 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

இதைத் தொடர்ந்து விழுப்புரம், கோவை, வேலூர், தூத்துக்குடி, நீலகிரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், ஓசூர், தஞ்சை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 6 செ.மீ., முதல் 10 செ.மீ., மழை பதிவாகி உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: அமலாக்கத்துறை அவகாசம் கோரியதால் ஒத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details