தமிழ்நாடு

tamil nadu

வெளியானது விக்ரம் ரன்னிங் டைம்! - ஸ்கீரின் ஸ்பேசுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளாரா லோகேஷ்?

By

Published : May 24, 2022, 12:30 PM IST

விக்ரம் திரைப்படத்தின் ரன்னிங் டைம் வெளியான நிலையில், படத்தில் உள்ள அனைவருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமமான ஸ்கீரின் ஸ்பேஸ் கொடுத்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஸ்கீரின் ஸ்பேசுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளாரா லோகேஷ்? - வெளியான விக்ரம் ரன்னிங் டைம்!
ஸ்கீரின் ஸ்பேசுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளாரா லோகேஷ்? - வெளியான விக்ரம் ரன்னிங் டைம்!

சென்னை:மாநகரம், கைதி, மாஸ்டர் என்ற வெற்றித் திரைப்படங்களின் வரிசையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கி இருக்கும் திரைப்படம், விக்ரம். கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் என முண்ணனி நடிகர்கள் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு கமல்ஹாசனின் ஆட்டம் போட வைக்கும் அறிமுக பாடலாக ‘பத்தல.. பத்தல..’ என்னும் பாடல் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

மேலும், இப்பாடல் வெளியாகி சில அரசியல் சர்ச்சைகளையும் சந்தித்தது. இதற்கிடையில், விக்ரம் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது. லோகேஷ் கனகராஜின் திரைக்கதைக்கும், கமலின் விஸ்வரூபத்தினையும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு மத்தியில், விக்ரம் திரைப்படம் ற ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் ரன்னிங் டைம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இரண்டு மணி நேரம் 53 நிமிடங்கள் ஓடுகிறது. இப்படத்தில் முக்கிய முண்ணனி நடிகர்கள் பலர் நடித்துள்ளதால், லோகேஷ் அனைவருக்குமான ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுத்துள்ளாரா, கதாபாத்திர முக்கியத்துவம் அனைவருக்கும் கொடுக்கப்பட்டு திரைப்படம் நேர்த்தியாக வந்திருக்குமா என்ற குழப்பம் தற்போது ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. அதேநேரம், விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு காமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நாளை வெளியாகிறது தனுஷின் 'தி க்ரே மேன்' ட்ரெய்லர்!

ABOUT THE AUTHOR

...view details