தமிழ்நாடு

tamil nadu

ஆதார் எண், மின் நுகர்வோர் எண் இணைப்பு - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

By

Published : Nov 27, 2022, 10:17 AM IST

மின் நுகர்வோர்களின் ஆதார் எண்ணுடன், மின் இணைப்பு எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை:ஆதார் சட்டம் 2016 பிரிவு 7ன் கீழ், மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

இதில், முதல் 100 யூனிட்டை இலவசமாக பெறும் வீட்டு நுகர்வோர், இலவச மின்சாரம் பெறும் குடிசை நுகர்வோர் மற்றும் விவசாயிகள், 750 யூனிட் இலவச மின்சாரம் பெறும் விசைத்தறி நுகர்வோர் மற்றும் 200 யூனிட் இலவசமாக பெறும் கைத்தறி நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்ற மானியம் பெறாத மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் இல்லை என்றும், ஒரே வளாகத்தில் அதிக இணைப்புகள் வைத்திருப்போர், பிற மோசடிகளில் ஈடுபடுபவர்களைக் கண்டுபிடிக்கவே ஆதார் எண்ணை மின் நுகர்வோர் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு - இலவச மின்சாரத்திற்கு பாதிப்பு இல்லை

ABOUT THE AUTHOR

...view details