தமிழ்நாடு

tamil nadu

சிங்கப்பூர் பறந்த அரசு பள்ளி மாணவர்கள்... மகிழ்ச்சியின் உச்சத்தில் மாணவிகள் கூறியது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2023, 10:02 AM IST

government school students trip to singapore: சென்னையில் மாநில அளவிலான இலக்கிய மன்ற போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 25 மாணவர்கள் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்று வந்த நிலையில் அவர்களது பயண அனுபவத்தை கூறினர்.

சிங்கப்பூர் சென்று வந்த அரசு பள்ளி மாணவர்கள் பேட்டி
சிங்கப்பூர் சென்று வந்த அரசு பள்ளி மாணவர்கள் பேட்டி

சிங்கப்பூர் சென்று வந்த அரசு பள்ளி மாணவர்கள் பேட்டி

சென்னை:தமிழக அரசு சார்பில் சிங்கப்பூர் சுற்றுலா சென்று வந்த அரசுப் பள்ளி மாணவிகள் பயணத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நண்பரை போல் பழகியதாக மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். மேலும், அங்குள்ள கட்டுபாடுகளை போல் இந்தியாவிலும் வர வேண்டும் எனவும், தங்களின் வாழ்க்கை கனவு வெளிநாடு சுற்றுலாவின் மூலம் மாற்றம் அடைந்துள்ளதாகவும் மாணவிகள் தெரிவித்து உள்ளனர்.

2022-2023ஆம் ஆண்டுக்காண "கலைத் திருவிழா" தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டது. கற்றல் மட்டும் இல்லாமல் பிற திறன்களை வெளிப்படுத்தும் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் 25 பேர் மலேசியாவிற்கும், 25 பேர் சிங்கப்பூருக்கும் ஒரு வாரம் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

சிங்கப்பூர் சென்ற 25 மாணவ மாணவிகள் தங்களின் சுற்றுலாவை முடித்துக் கொண்டு நேற்று (செப். 11) மதியம் சென்னை விமான நிலையத்திற்கு திரும்பினர். அவர்களில் சில மாணவிகள், பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவொளியை சந்தித்து, தங்களது பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

அப்போது ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி அளித்த மாணவிகள் மோ.திக்சிதா மற்றும், ஜராேலின் தேவ ஸ்வினா ஆகியோர் கூறும்போது, "அரசுப் பள்ளியில் நடத்தப்பட்ட திறன் சார்ந்தப் பாேட்டிகளில் பங்கேற்று மாநில அளவில் வெற்றிப் பெற்றோம். இதன் மூலம் சிங்கப்பூர் நாட்டிக்கு அழைத்து செல்லப்பட்டோம். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தோம். விமானம் தலைக்கு மேலே செல்வதை மட்டுமே நாங்கள் பார்த்து இருந்தோம்.

இதையும் படிங்க:who is Immanuel Sekaran: தியாகி இமானுவேலுவுக்கு மணிமண்டபம்! யார் இந்த இமானுவேல் சேகரனார்?

முதல் முறையாக விமானத்தை தொட்டு பார்த்ததோடு மட்டுமல்லாமல், அதில் பயணமும் செய்துள்ளோம். கலாசாரம், தூய்மையான சிங்கப்பூர், கட்டுப்பாடான விதிமுறைகள், அதனை கடைபிடிக்கும் மக்கள் என பல்வேறு விஷயங்களை பார்த்தோம். அதுபோன்ற நடைமுறை இந்தியாவிலும் வர வேண்டும். மேலும் அந்த நாட்டில் சென்று படிக்க வேண்டும் என தோன்றுகிறது, அதற்காக தயார் செய்துக் கொள்ள விரும்புகிறோம்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்பது போல சிங்கப்பூரில் இருக்கும் தமிழர்கள் எங்களை நன்றாக கவணித்து கொண்டனர். அங்குள்ள தமிழ் கலைஞர்கள் என அனைவரையும் சந்தித்தது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்களுடைய கனவை மேலும் பெரிதாக மாற்றியுள்ளது இந்த சுற்றுலா பயணம்.

பொருளாதார சூழ்நிலைகளால் எங்களால் வேறு ஊருக்கே பயணம் மேற்கொள்ள முடியாது. ஆனால் இப்போது தமிழக அரசால் நாங்கள் விமானத்தில் சென்றுள்ளோம். இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த தமிழக முதலமைச்சர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி.

மேலும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எங்களோடு நண்பராக மிக நன்றாக பழகியதோடு, பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினார். சுற்றுலா இடங்களுக்கு செல்லும் போது தங்களுடன் சாவரி செய்தார். மேலும் அங்கு உள்ள நூலகத்திலும் கலந்துரையாடினார்" என மாணவிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:Udhayanithi stalin: 'சினிமாவில் நடிக்கலாம்; அரசியலில் நடிக்க முடியாது'- அமைச்சர் உதயநிதி கருத்து!

ABOUT THE AUTHOR

...view details