தமிழ்நாடு

tamil nadu

கரோனா காலத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலத்தை பணிக்காலமாக அனுமதித்து அரசாணை வெளியீடு

By

Published : Feb 18, 2023, 3:56 PM IST

கரோனா ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலத்தை பணிக்காலமாக, தகுதியுள்ள அல்லது சிறப்பு விடுப்பாக அனுமதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

Etv Bharat
Etv Bharat

சென்னை:கரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் மருத்துவம், பேரிடர் மேலாண்மை, காவல்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மின்சாரம் குடிநீர் வழங்கல் தலைமை செயலகம், கருவூலங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகள் தவிர்த்து பிற துறைகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டது.

2021ஆம் ஆண்டு மே 10 தேதி முதல் ஜூலை 4ஆம் தேதி வரை ஊரடங்கு காலத்தில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த பிற துறைகளை சார்ந்த ஊழியர்களுக்கு பணிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட காலத்தை பணிக்காலமாக கருதி தகுதியுள்ள அல்லது சிற்ப்பு விடுப்பாக அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த அரசாணையில் அரசு ஊழியரோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களோ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமை படுத்தப்பட்டிருந்தாலோ அல்லது கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் வசித்தாலோ அந்த தனிமை படுத்தப்பட்ட காலம் சிறப்பு விடுமுறை காலமாக கருதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் பெண் பணியாளர்களை பொறுத்தவரை கர்ப்பிணி பெண் ஊழியர்களுக்கு விடுமுறை காலமாக கருதப்படும். தலைமை செயலக பணியாளர்களை பொறுத்தவரை கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், நோய்வாய்ப்பட்ட பணியாளர்களுக்கு விடுமுறையாக அறிவிப்பது குறித்து அந்தந்த துறை செயலாளர்களே முடிவெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த அன்புமணி ராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details