தமிழ்நாடு

tamil nadu

’அயன்’ திரைப்பட பாணியில் தங்கக் கடத்தல்!

By

Published : Dec 3, 2020, 7:42 PM IST

சென்னை : அயன் திரைப்பட பாணியில் துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 60 லட்சம் ரூபாய் மதிப்புடைய 1.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Gold smuggling from dubai
Gold smuggling from dubai

சென்னை, சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று (டிச.03) காலை துபாயிலிருந்து இண்டிகோ தனியாா் மீட்பு விமானம் வந்தது. விமானத்திலிருந்து பயணிகள் இறங்கிய பிறகு, ஊழியர்கள் விமானத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சீட்டிற்கு அடியில் பார்சல் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்ததை ஊழியர்கள் பார்த்து சுங்கத்துறை அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே அங்கு விரைந்து அந்தப் பொட்டலத்தை அலுவலர்கள் சோதனையிட்டதில் 50 லட்சம் ரூபாய் மதிப்புடைய ஒரு கிலோ தங்கம் கண்டறியப்பட்டது.

இதையடுத்து துபாயிலிருந்து வந்த பயணிகளிடம் சுங்கத்துறையினா் சோதனை மேற்கொண்டதில், வேலூரைச் சோ்ந்த விவேக் மனோகரன் (30) என்பவா் அணிந்திருந்த காலணியிலிருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய 200 கிராம் தங்கம் கண்டறியப்பட்டது.

தொடர்ந்து அவற்றைப் பறிமுதல் செய்து, அந்நபரைக் கைது செய்த சுங்கத்துறை அலுவலர்கள், சீட்டுக்கு அடியில் தங்கத்தை மறைத்து வைத்தவரையும் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details