தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் மீண்டும் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 6:51 PM IST

Chennai Gold Rate: இஸ்ரேல்-ஹமாஸ் இடையே உருவாகியுள்ள போரின் எதிரொலியாக, உலக முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய்யில் முதலீடு செய்து வருவதால், தொடர்ந்து தங்கத்தின் விலை மீண்டும் சரிவடைய தொடங்கியுள்ளது.

சென்னையில் குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலை
சென்னையில் குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலை

சென்னை:சென்னையில், 22-கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.11) சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து விற்பனையாகி வருகின்றது. சேமிப்பு என்றாலே இந்திய மக்களின் மனதில் முதலில் தோன்றும் எண்ணம் தங்கம் தான். முக்கியமாக நடுத்தர, பாமர மக்களுக்கு அத்தியாவசிய, எதிர்காலத் தேவைக்கு கைகொடுக்கும் ஒரு முக்கிய முதலீடு மற்றும் உதவும் பொருளாக பார்பது தங்கம் மட்டும் தான்.

ஆனால், சர்வதேச பொருளாதர சுழலில் தங்கத்தின் விலையானது மத்தியில், கமாடிட்டி மார்க்கெட்டைப் பொருத்து நீர்ணயம் செய்யபட்டு வருகிறது. இது மட்டுமின்றி சர்வேதச வங்கி, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்கா வங்கிகளின் வட்டி விகிதம் என்று பல்வேறு காரணங்கள் முன் வைக்கப்படுவதனால், தங்கத்தின் விலை தினமும் ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது.

மேலும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, தொடர் சரிவை சந்தித்த தங்கம் விலை, இஸ்ரேல்-ஹமாஸ் இடையே உருவாகியுள்ள போரின் எதிரொலியாக சனிக்கிழமை தங்கம் விலை இரண்டு முறை அதிகரித்தது. அதைத் தொடர்ந்து, உலக முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய்யில் மூதலீடு செய்வதால், திங்கள்கிழமை(அக்.09) முதல் தங்கத்தின் விலையானது குறைந்து வருகிறது.

சென்னையில் 22-கேரட் கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 372 ரூபாய்க்கும், சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து, சவரன் 42 ஆயிரத்து 976 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறன. இதேப்போல், ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் குறைந்து 75 ரூபாய்க்கும் கிலோவிற்கு 500 ரூபாய் குறைந்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் இன்றைய (அக்.11) விலை நிலவரம்:

  • 1-கிராம் தங்கம்(22கேரட்) - ரூபாய் 5,372
  • 1-சவரன் தங்கம்(22கேரட்) - ரூபாய் 42,976
  • 1-கிராம் தங்கம் (24-கேரட்) - ரூபாய் 5,842
  • 8-கிராம் தங்கம் (24-கேரட்) - ரூபாய் 46,736
  • 1-கிராம் வெள்ளி - ரூபாய் 75.00
  • 1-கிலோ வெள்ளி - ரூபாய் 75,000

இதையும் படிங்க:அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களோடு பார்ட்னர்ஷிப்: நீங்களும் ஆகலாம் லட்சாதிபதி.!

ABOUT THE AUTHOR

...view details