தமிழ்நாடு

tamil nadu

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதே நோக்கம் - நடிகை காயத்ரி ரகுராம்

By

Published : Aug 27, 2021, 5:33 PM IST

Updated : Aug 27, 2021, 5:50 PM IST

பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் நோக்கம் என நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.பெண்களுக்கு பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம் என்பதே அவரின் நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Gayatri
Gayatri

சென்னை:தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் கே.டி.ராகவனின் ஆபாச காணொலியை சமீபத்தில், பாஜக சார்பு நிலை ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டார்.

இந்த காணொலியை வெளியிடுவதற்கு, பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஒப்புதல் வழங்கியதாகவும் மதன் ரவிச்சந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

வீடியோவை வெளியிட சொன்னது அண்ணாமலை

இதைத்தொடர்ந்து கே.டி.ராகவனின் ஆபாச காணொலியை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரனின் யூ-ட்யூப் முடக்கப்பட்டது. பின்னர் மதன் ரவிச்சந்திரன் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து மதன் ரவிச்சந்திரன் 40 நிமிட ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் கே.டி.ராகவன் குறித்து வீடியோவை வெளியிடச்சொன்னதே அண்ணாமலை தான் என்று மதன் கூறினார்.

பெண்களுக்கு பாதுகாப்பு

நடிகை காயத்ரி ரகுராம்

இந்நிலையில் அண்ணாமலைக்கு ஆதரவாக, பாஜக பிரமுகரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் பேசிய காயத்ரி ரகுராம், எங்கள் தலைவர் அண்ணாமலை சொந்த சகோதரி போல மரியாதையுடன் நடத்துபவர்.

உள்நோக்கத்துடன் ஆடியோவை திரித்து வெளியிட்டுள்ளார்கள். தேசத்துக்குச் சேவை, பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதே அவரது நோக்கம். பெண்களுக்கு பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம் என்பதே அவரின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போலி சிங்கம் - மதன் ரவிச்சந்திரன் விமர்சனம்

Last Updated : Aug 27, 2021, 5:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details