தமிழ்நாடு

tamil nadu

1,000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.420 கோடி ஒதுக்கீடு

By

Published : Nov 30, 2022, 1:17 PM IST

1,000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

1,000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.420 கோடி ஒதுக்கீடு
1,000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.420 கோடி ஒதுக்கீடு

சென்னை: கடந்த சட்டப்பேரவையில் முதலமைச்சர் 110 விதியின் கீழ் புதிய பேருந்துகள் வாங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். பழைய பேருந்துகளை கழிவு செய்து புதிய பேருந்துகளை வாங்க ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மாநகர போக்குவரத்துக் கழகம், விரைவு போக்குவரத்துக் கழகம் தவிர்த்து இதர கோட்டங்களுக்கு சேர்த்து ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பேருந்து தலா ரூ.42 லட்சம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

1,000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.420 கோடி ஒதுக்கீடு

இதில் விழுப்புரம் மாவட்டத்திற்கு - 180, சேலம் - 100, கோவை - 120, மதுரை - 220, கும்பகோணம் - 250, நெல்லை - 130 பேருந்துகள் வாங்கப்பட உள்ளன.

இதையும் படிங்க: தெலங்கனா முதல்வர் வீடு முற்றுகை: ஆந்திர முதல்வரின் சகோதரி கைது!

ABOUT THE AUTHOR

...view details