தமிழ்நாடு

tamil nadu

’காவல் துறைக்கே சங்கமில்லை, ஊர்க்காவல் படைக்கு சங்கமா?’

By

Published : Sep 1, 2020, 2:51 PM IST

சென்னை: அனுமதியில்லாமல் ஊர்க்காவல் படைக்கு சங்கம் அமைப்பது தண்டனைக்குரிய குற்றம் என காவல் துறை துணை ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.

chennai high court
chennai high court

ஊர்க்காவல் படையைச் சேர்ந்த நாகேந்திரன் என்பவர் சங்கம் தொடங்கியதையடுத்து அவருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனை எதிர்த்து நாகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உள்துறை கூடுதல் செயலர் சார்பாக, சென்னை மாநகர காவல் துறை துணை ஆணையர் பெரோஸ் கான் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், "ஊர்க்காவல் படை என்பது சட்டப்பூர்வ அதிகாரமில்லாத ஒரு தன்னார்வ அமைப்பு. தேவையை பொறுத்து அவர்கள் பணிக்கு அழைக்கப்படுவார்கள். அவர்களுக்கு நாளொன்றுக்கு 560 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. காவல் துறைக்கே சங்கம் வைக்க சட்டப்பூர்வமான அனுமதியில்லை என்கின்ற போது, காவல் துறை பணிகளை மேற்கொள்ளும் ஊர்க்காவல் படைக்கும் சங்கம் வைக்க அனுமதியில்லை. அரசின் அனுமதியின்றி சங்கம் அமைப்பது தண்டனைக்குரிய குற்றம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, காவல் துறையின் மனுவுக்கு பதிலளிக்க மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரியதையடுத்து, வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் 7ஆம் தேதி நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில் வரவுள்ளது.

இதையும் படிங்க:அதிகாரவர்க்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான அடையாளம் அனிதா

ABOUT THE AUTHOR

...view details