தமிழ்நாடு

tamil nadu

உதயநிதி கபளீகரம் செய்யக்கூடாது... ஜெயக்குமார் எச்சரிக்கை!

By

Published : Apr 13, 2022, 9:09 PM IST

ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு, ரெட் ஜெயன்ட் மூவிஸ், திரைத்துறையில் சிறிய தயாரிப்பாளர்களை மிரட்டி படங்களை கபளீகரம் செய்யும் நடவடிக்கை, மீண்டும் தலைதூக்கி வருவதாக, திமுக மீது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

former minister jayakumar  jayakumar complaint against dmk  jayakumar has blamed dmk  திமுக அரசு மீது புகார் தெரிவித்த ஜெயக்குமார்  முன்னால் அமைச்சர் ஜெயக்குமார்  ஜெயக்குமார் ஆவேசப் பேச்சு  திமுக மீது குற்றம்சாட்டிய ஜெயக்குமார்  ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு
முன்னால் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், தன்னை கைது செய்யும்போது காவல் துறையினர் அத்துமீறி நடந்து கொண்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், கடந்த 35 ஆண்டுகளாக எந்த ஒரு வழக்கும் இல்லாமல் மக்கள் பாராட்டும் வகையில் வாழ்ந்து வந்ததாகவும், அதன் காரணமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு பதவிகளை அளித்ததாகவும் தெரிவித்தார்.

தற்போது தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான குற்றச்சாட்டை வைத்து தன் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறிய அவர், சமூக விரோதியான நரேஷ் என்பவர் மூலம் ஒரு பொய்யான புகாரை அளிக்க வைத்து, தன்னை கைது செய்ததாகக் கூறினார்.

காவல் துறையினர் மீது புகார் கொடுத்த ஜெயக்குமார்

அதுமட்டுமின்றி மனித உரிமையை மீறி அத்துமீறி தன் வீட்டிற்குள் நுழைந்து, தன்னை கைது செய்ததாக குற்றம் சாட்டிய ஜெயக்குமார், தன்னிடம் அத்து மீறி நடந்து கொண்ட காவல் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், 'ஜெயலலிதா இருக்கும்போதே, தனக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என எழுதிக் கொடுத்த பின் வீட்டிற்குள் சேர்ந்த சசிகலா, அதே நிலையில் தொடர்ந்து இருந்தால் நல்லது' என்றார்.

கடந்த முறை திமுக ஆட்சியில் இருந்தபோது திரைப்படத் தொழிலை வளரவிடாமல் செய்ததாகவும், தற்போது ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு, 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' என்ற நிறுவனத்தின் மூலம் சிறிய தயாரிப்பாளர்களிடம் இருந்து குறைந்த விலைக்கு படங்களை கபளீகரம் செய்யும் நடவடிக்கை தலைதூக்கி உள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: என் கணவரின் சாவுக்கு நீதி வேண்டும்- சந்தோஷ் பாட்டீல் மனைவி!

ABOUT THE AUTHOR

...view details