தமிழ்நாடு

tamil nadu

ஆலோசனைக் கூட்டத்தில் பேசியதை அதிகாரப்பூர்வ கருத்தாக எடுத்துக் கொள்ளக்கூடாது - ஜெயக்குமார்

By

Published : Jul 7, 2021, 8:41 PM IST

Updated : Jul 7, 2021, 10:48 PM IST

சி.வி. சண்முகம் ஆப் தி ரெக்கார்டாகத் தான் கூட்டத்தில் பேசியுள்ளார். ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கருத்துக்களை அதிகாரப்பூர்வ கருத்தாக எடுத்துக் கொள்ளக்கூடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை:வடசென்னை தெற்கு மாவட்டம் அதிமுக சார்ப்பில் வழக்கறிஞர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சி.வி.சண்முகம் ஆப் தி ரெக்கார்டாக தான் கூட்டத்தில் பேசியுள்ளார். அதுகுறித்து கருத்து கூற முடியாது. கட்சியில் மாவட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் வெளிப்படும் அந்தக் கருத்துக்களை அதிகாரப்பூர்வ கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது. அது போன்ற கருத்துக்களுக்கு கே.டி.ராகவன் போன்றவர்கள் பதில் கூறுவது ஆரோக்கியமான செயல் இல்லை.

தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி உள்ளதா இல்லையா என்பது குறித்து முடிவு செய்யப்படும். கூட்டணி குறித்து கட்சி தலைமை தான் முடிவெடுக்கும். எங்கள் கட்சி குறித்தும், கட்சியின் தலைமை குறித்தும் விமர்சிக்க யாருக்கும் அருகதை கிடையாது. அவரவருக்கு தனி கருத்துகள் இருக்கும். ஆனால் அது கட்சியின் கருத்தாக இருக்க முடியாது என்றார்.

அப்பாவி அணில் மீது பழி

தொடர்ந்து திமுகவின் ஆட்சியை விமர்சித்த அவர்," அமைப்பு சாரா தொழிலாளர்கள், மீனவர்கள் என யாருக்கும் திமுக நிவாரணம் வழங்கவில்லை. அதிமுக ஆட்சியில் அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

மக்கள் தற்போது தடுப்பூசி செலுத்தி கொள்ள தயாராக உள்ளனர். இந்நிலையில் தடுப்பூசி குறித்து வாய் கிழிய பேசாமல், மருந்தை வாங்கி மக்களுக்கு மக்களுக்கு செலுத்த வேண்டும்.

அதிமுக ஆட்சியில் அணில் இல்லையா என்று கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், இப்போது மின்வெட்டுக்கு அணில் தான் காரணம் என்று கூறுகின்றனர். வேலை செய்ய திறமை இல்லாததன் காரணமாக அப்பாவி அணில் மீது குற்றஞ்சாட்டுகின்றனர் மேலும், 17 வருடம் ஒன்றிய அரசுடன் கூட்டணியில் இருந்த போது, தமிழ்நாட்டை வளப்படுத்தவில்லை. அவர்கள் குடும்பத்தை தான் வளப்படுத்தி கொண்டனர்.

தமிழ்நாட்டு மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டும் என்றும், தேவையில்லாதவற்றை கூறி மக்களை திசை திருப்ப கூடாது" என்றார்.

இதையும் படிங்க:’அரசியல் கண்ணோட்டம் தவிர்த்து போக்குவரத்து தொழிலாளர்களை ஒரே மாதிரியாக நடத்த வேண்டும்’ - ஓபிஎஸ் அறிக்கை

Last Updated :Jul 7, 2021, 10:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details