தமிழ்நாடு

tamil nadu

கடல் பசு, தேவாங்கை பாதுகாக்க சிறப்பு திட்டம் - வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2023, 10:57 PM IST

forest minister mathiventhan: புதிய காப்பகங்கள், பறவைகள் சரணாலயங்கள், அழிந்து வரும் உயிரினமான (Endangered Species) கடல் பசுவை பாதுகாப்பதற்கான பாதுக்காப்பு திட்டங்கள், தேவாங்கு பாதுகாப்பு போன்றவற்றிற்கான திட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தமிழக வனத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

Forest Minister Mathiventhan said focusing on a special project to protect the sea cow and Slender loris
வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்

சென்னை: சென்னையை அடுத்த வண்டலூரில், உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பல்வேறு விலங்குகள், பறவைகள், ஊர்வனங்கள் என பல வகைகள் உள்ளன. அதில் சிங்கம் மற்றும் மான்கள் உலாவிடம் மிகவும் பிரபலமான ஒன்றாகும். கடந்த 2020 மார்ச் கொரோனா பரவிய காரணத்தால் இவ்வுலாவிடம் பார்வையாளர்களுக்கு மூடப்பட்டது.

தற்போது சிங்க உலாவிடத்தில் 7 சிங்கங்கள் (3 ஆண் 4 பெண்) உள்ளன. பன்னர்கட்டா மற்றும் லக்னோ உயிரியல் பூங்காவிலிருந்து இரண்டு சிங்கங்கள் (1 ஆண் 1 பெண்) கொண்டுவரப்பட்டன. மான்கள் உலாவிடப் பகுதியில் ஏராளமான கடமான், புள்ளிமான் மற்றும் கேளையாடு மான்கள் இருக்கின்றன.

பார்வையாளர்களின் வசதிக்காகச் சிங்கம் மற்றும் மான் உலாவிடம் திறக்கப்பட்டுள்ளது. உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களுக்கான சிங்கம் மற்றும் மான்கள் உலாவிடப் பகுதிக்குச் செல்வதற்கான (Lion and Deer Safari) வசதியையும், QR குறியீட்டு நுழைவுச்சீட்டு வசதியையும் மற்றும் பூங்கா வனவிலங்கு மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கையும் இன்று (அக்டோபர்-02) வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.

பின்னர் பேசிய வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், “வனத்தையும் மற்றும் வன உயிரினங்களையும் பாதுகாப்பதில் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளைத் தமிழக அரசு எடுத்து வருகிறது. புதிய காப்பகங்கள், பறவைகள் சரணாலயங்கள், அழிந்து வரும் உயிரினமான (Endangered Species) கடல் பசுவை பாதுகாப்பதற்கான பாதுகாப்பு திட்டங்கள், தேவாங்கு பாதுகாப்பு போன்றவற்றிற்கான திட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், வனத்துறையை நவீனப்படுத்த ரூ.52 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், வன விலங்குகளால் பாதிக்கப்படுவோர்களுக்கு உரிய நேரத்தில் நிவாரணம் வழங்கிட ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், முதுமலை புலிகள் காப்பகத்தின் இணையதளம் குறித்துப் பேசிய அவர், இந்த இணையதளம் காப்பகங்கள் பற்றிய விரிவான தகவல்களை வழங்குவதுடன், ஓய்வு இல்லங்கள் மற்றும் வனச்சுற்றுலா (Jungle Safari) போன்ற வசதிகளையும் ஆன்னைலனில் பதிவு செய்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது” என கூறினார்.

முதுமலை புலிகள் காப்பகத்தில் நினைவுப்பொருட்களை ஆன்லைனில் வாங்கும் வகையில் புதிய இணையதளத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த இணையதளம் மூலமாக புலிகள் காப்பகங்கள் தங்கள் பொருட்களை ஆன்லைனில் விற்க ஏதுவாக இருக்கும் எனவும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காந்தி ஜெயந்திக்கு டாஸ்மாக் லீவு.. பாரின் பின்பக்கம் களைகட்டிய மது விற்பனை.. வைரலாகும் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details