தமிழ்நாடு

tamil nadu

“எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் அம்மாநில மொழியைக் கற்பது அவசியம்” - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 3:16 PM IST

Rozgar Mela: ரோஜ்கர் மேளா திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் வழங்கினார்.

நாடு முழுவதும் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை..பிரதமர் மோடி வழங்கினார்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

ரோஜ்கர் மேளா திட்டம்

சென்னை:நாடு முழுவதும் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புமாறு, உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். அதன்படி, 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்க வகை செய்யும் வேலை வாய்ப்பு நிகழ்வான ரோஜ்கார் மேளா என்னும் திட்டத்தை, பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கி வைத்தார். இதன்படி மாதந்தோறும் ஆயிரக்கணக்கானோருக்கு அவர் பணி நியமன ஆணைகளை காணொளிக் காட்சி மூலம் வழங்கி வருகிறார்.

இந்நிலையில் இன்று (செப்.26) ரோஜ்கர் மேளா திட்டத்தின் 9வது நிகழ்ச்சி மூலமாக, 10 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற அரசின் தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில், அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாக சேர்க்கப்பட்ட சுமார் 51,000 பேருக்கு வேலைவாய்ப்பு விழா மூலம் பணி நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்ச்சியை பிரதமர் காணொளிக் காட்சி வாயிலாக வழங்கினார். நாடு முழுவதும் 46 இடங்களில் 9வது ரோஜ்கர் மேளா நடைபெற்றது.

அந்த வகையில், சென்னை, எழும்பூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற 9வது ரோஜ்கர் மேளா வேலைவாய்ப்பு விழா நிகழ்ச்சியில், 156 நபர்கள் பணி ஆணைகளை பெற உள்ள நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு அவர்களில் 25 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார்.

மேலும், ரோஜ்கர் மேளா வேலைவாய்ப்பு மூலமாக நாடு முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்படும் புதிய நியமனதாரர்கள் மத்திய அரசின் தபால் துறை, இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறை, அணுசக்தித் துறை, வருவாய்த் துறை, உயர் கல்வித்துறை, பாதுகாப்பு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியில் சேர்வார்கள்.

நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது, “ரோஜ்கர் மேளா கடந்த ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி முதல் இன்று வரை என 9 நிகழ்ச்சிகள் நடந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3 இடங்களில் இந்த திட்டத்திற்கான நிகழ்ச்சி நடைபெறுகிறது. தமிழகத்தில் 553 நபர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பணிகளுக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக காலிப் பணியிடங்களுக்கு பதிவு செய்ய வேண்டும்.

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் குறைவாக விண்ணப்ப பதிவு செய்வதால் காலிப் பணியிடங்களை நிரப்ப வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் வேலைக்கு வருகிறார்கள். அனைத்துப் பணிகளுக்கும் தேர்வு இப்போது வைக்கப்படுகிறது. தமிழகத்தில் இருப்பவர்கள் தேர்வு எழுதி வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எந்தப் பணிக்கு எந்த மாநிலத்திற்குச் செல்கிறோமோ அதற்கு தேவையான மொழியை கற்றுக் கொள்வது அவசியம்” என்று கூறினார்.

இதையும் படிங்க:மின் கட்டண உயர்வு..! தமிழக அரசை கண்டித்து சிறு, குறு தொழில் நிறுவனங்கள் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details