தமிழ்நாடு

tamil nadu

தென் மாவட்டங்களில் தொடர் கனமழை எதிரொலி; 4 விமான சேவைகள் ரத்து..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 12:39 PM IST

Flights cancelled due to heavy rain: தென் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னை-தூத்துக்குடி இடையே இயக்கப்படும் 4 விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

தென் மாவட்டங்களில் தொடர் கனமழையால் விமான சேவைகள் ரத்து
தென் மாவட்டங்களில் தொடர் கனமழையால் விமான சேவைகள் ரத்து

சென்னை: தென் தமிழகத்தில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது.

சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சென்ற ரயில்கள் வழியில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், அம்மாவட்டங்களில் பேருந்து சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கும், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கும் வரும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

அந்தவகையில், இன்று (டிச.18) காலை 5:45 மற்றும் 10 15 மணிக்கு, சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வேண்டிய 2 இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானங்கள், அதேபோல் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு காலை 9:40 மணி மற்றும் பகல் 1:40 மணிக்கு வரவேண்டிய 2 இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், என 4 விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், இன்று (டிச.18) பிற்பகல் 2:10 மணிக்கு, தூத்துக்குடி சென்று விட்டு, மாலை 6:05 மணிக்கு, சென்னை திரும்பும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், அப்போதைய வானிலை நிலைக்குத் தகுந்தார் போல் முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி செல்ல வந்த விமான பயணிகள் மதுரைக்குச் செல்லும் விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றனர். குறிப்பாக, இன்று காலை 5:45 மணிக்கு தூத்துக்குடி செல்ல நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, முன்பதிவு செய்துள்ளார். ஆனால் தற்போது மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, காலை 7:55 மணிக்கு, மதுரை செல்லும் விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.

இதையும் படிங்க:கோரம்பள்ளம் குளக்கரையில் உடைப்பு... வெள்ள அபாயத்தில் தூத்துக்குடி!

ABOUT THE AUTHOR

...view details