தமிழ்நாடு

tamil nadu

மீன்வளத்துறை அலுலர்களுடன் ஜெயக்குமார் ஆலோசனை

By

Published : Jan 4, 2020, 3:44 PM IST

சென்னை : மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீன்வளத்துறை அலுவலர்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை, jayakumar meets fisheries department officials
அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை


சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகின்ற 6ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீன்வளத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதில், மீன்வளத்துறை செயலர் கோபால், இயக்குநர் சமீரன், கூடுதல் மீன்வளத்துறை இயக்குநர்கள், மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் ஃபெலிக்ஸ், இணை மற்றும் துணை மீன்வள இயக்குநர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மீன்வளத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தும் அமைச்சர் ஜெயக்குமார்

இதில், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது, 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் திட்டங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன. 110 விதியின் கீழ் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும் இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.

இதையும் படிங்க : அமராவதிக்கு நோ, விசாகப்பட்டினத்துக்கு எஸ் - பிசிஜி அறிக்கை

Intro:Body:சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகின்ற 6ம் தேதி தொடங்க உள்ள நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதில் மீன்வளத்துறை செயலர் கோபால், இயக்குனர் சமீரன், கூடுதல் மீன்வளத்துறை இயக்குனர்கள் மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் ஃபெலிக்ஸ், இணை மற்றும் துணை மீன்வள இயக்குனர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதில் சட்டசபையில் கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது, 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் திட்டங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும். கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது தொடர்பாகவும், ஏற்கனவே 110 விதியின் கீழ் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. Conclusion:

ABOUT THE AUTHOR

...view details