தமிழ்நாடு

tamil nadu

பெருங்குடி குப்பைக் கிடங்கு தீ விபத்து - இரண்டாம் நாளாக போராடும் தீயணைப்பு வீரர்கள்

By

Published : Apr 28, 2022, 6:36 PM IST

சென்னை மாநகராட்சியின் பெருங்குடி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை இரண்டாவது நாளாக இன்றும் தீயணை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பெருங்குடி குப்பைக் கிடங்கு தீ விபத்து
பெருங்குடி குப்பைக் கிடங்கு தீ விபத்து

சென்னை மாநகராட்சியின் பெருங்குடி குப்பைக்கிடங்கில் நேற்று (ஏப்.27) மாலை தீ விபத்து ஏற்பட்டது. நுழைவுவாயில் அருகே ஏற்பட்ட தீ மளமளவென அருகிலுள்ள குப்பை மேடுகளுக்கும் பரவியது. இதனால், குப்பை கிடங்கின் ஒரு பகுதி முழுவதும் தீ பற்றி எரியத் தொடங்கியது.

உடனடியாக தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து இரவு முழுவதும் தீயை அணைக்கும் பணிகள் நடந்தன. இரண்டாவது நாளாக இன்றும் தீயணைப்பு பணிகள் தொடரும் நிலையில், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஸ்குமார், சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மகேஷ்குமார், “நேற்று மாலை 3 மணியிலிருந்து தீயணைப்புப் பணியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எட்டு தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபட்டு, தற்போது தீ மேற்கொண்டு அருகிலுள்ள சதுப்பு நிலத்திற்கு பரவாமல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கோடை வெயில் காரணமாக தீ ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது” என்றார். மேலும், பெருங்குடி கிடங்கில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க துறை அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தீயினால் கருகி மலைப்போல் தேங்கி கிடக்கும் கழிவுகளில் இருந்து தொடர்ந்து புகை வெளியேறுவதால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளிக்கின்றன.

மாநகராட்சி துணை மேயர் மகேஸ்குமார்

மேலும், இதனால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அங்கு பாதுகாப்பு பணிகள், அவசர ஊரதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அரசு அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:காப்பாற்ற சென்றவரும் உயிரிழந்த பரிதாபம்.. தஞ்சை தேர் விபத்தின் கோரம்...

ABOUT THE AUTHOR

...view details