தமிழ்நாடு

tamil nadu

கடந்த ஆட்சியில் செய்த சட்ட தவறுகள் திருத்தப்படும் - பழனிவேல் தியாகராஜன்

By

Published : Jun 22, 2021, 5:21 PM IST

சட்டப்பேரவையில் இன்று பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த ஆட்சியில் செய்த சட்ட தவறுகள் திருத்தப்படும் என்று தெரிவித்தார்.

கடந்த ஆட்சியில்  செய்த சட்ட தவறுகள் திருத்தப்படும் - பழனிவேல் தியாகராஜன்
கடந்த ஆட்சியில் செய்த சட்ட தவறுகள் திருத்தப்படும் - பழனிவேல் தியாகராஜன்

சென்னை: சட்டப்பேரவை இரண்டாவது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் வேல்முருகன், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் எனக் கூறினார். இதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இது பற்றி ஆளுநர் உரையிலே கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கடைசி 10 ஆண்டுகளில் எந்த சட்டத்தின் அடிப்படையில், அரசாணைகள் மூலம் தமிழர்களை தவிர வேற மாநிலத்தவர்களுக்கு வேலை வழங்கப்பட்டது என ஆய்வு செய்து அந்த தவறுகள் சரி செய்யப்படும். மேலும் அந்த தவறுகள் நடைபெறாது வகையில் தமிழ்நாடு அரசு செயல்படும் என்றும் தெரிவித்தார்.

நிதித்துறையைப் பொருத்தவரை விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று கூறினார்.

இதையும் படிங்க:3-ஆவது அலை - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை

ABOUT THE AUTHOR

...view details