தமிழ்நாடு

tamil nadu

விக்னேஷ் லாக்கப் மரணம் : ரூ.1 லட்சத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்க குடுப்பத்தினர் முடிவு?

By

Published : Apr 29, 2022, 11:41 AM IST

தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் சந்தேகமான முறையில் உயிரிழந்த விக்னேஷ் குடும்பத்திற்கு காவல்துறை தரப்பில் வழங்கப்பட்டதாக கூறப்படும் 1 லட்சம் ரூபாய் பணத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் லாக்கப் மரணம்
விக்னேஷ் லாக்கப் மரணம்

சென்னை:சென்னையில் 25 வயதான விக்னேஷ் என்ற இளைஞரை தலைமைச் செயலக காலனி காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச்சென்று காவல் துறையினர் அடித்து துன்புறுத்தியதால் அவர் உயிரிழந்துவிட்டதாக அவரது சகோதரர் தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புரசைவாக்கம் கெல்லீஸ் சிக்னல் பகுதியில் (ஏப்.18) அன்று தலைமைச்செயலக குடியிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் வாகனத்தணிக்கை சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக ஆட்டோவில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுரேஷ் என்ற ஜொள்ளு சுரேஷ் (28), பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ்(25) என்ற விக்னா ஆகியோர் வந்தனர்.

காவல்துறை வழங்கிய ரூ.1 லட்சத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ள குடுப்பதினார்

அவர்களை சோதனை செய்தபோது, இருவரிடமிருந்து 50 கிராம் கஞ்சா, மதுபாட்டில்கள், கத்தி, ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், இருவரையும் விசாரணைக்காக தலைமைச்செயலக குடியிருப்பு காவல் நிலையத்திற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக, காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் போது, காவல் துறையினரை விக்னேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்க முற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காவல் நிலையத்தில் இருவரது குற்ற பின்னணிகள் குறித்தும் ஆராய்ந்ததில் விக்னேஷ் மீது இரண்டு வழக்குகளும், சுரேஷ் மீது 11 வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. மறுநாள் (ஏப்.19) காலை வரை ஸ்டேஷனில் இருந்த இருவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் விக்னேஷுக்கு வாந்தி, வலிப்பு ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு விக்னேஷ் ஏற்கெனவே இறந்திருப்பது தெரிய வந்ததாகவும் காவல் துறையினரால் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த விவகாரம் (ஏப்.26) சட்டப்பேரவையிலும் எதிரொலிக்கத் தொடங்கியது. காவல் நிலையத்தில் உயிரிழந்த விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கவும், சுரேஷின் உயர் மருத்துவ சிகிச்சை ஆனது தமிழ்நாடு அரசின் செலவில் மேற்கொள்ளப்படும். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் காவல் மரணத்தில் தீவிர விசாரணை என்பதில் உறுதியாக உள்ளோம்என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தெரிவித்தார்.

இதனையடுத்து, தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி விக்னேஷ் மரணமடைந்த சம்பவம் சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து, சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், விக்னேஷ் குடும்பத்திற்கு காவல்துறை தரப்பில் வழங்கப்பட்ட 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: 'விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்... ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் லாக்-அப் மரணம் குறித்து விசாரிக்கப்படும்'

ABOUT THE AUTHOR

...view details