தமிழ்நாடு

tamil nadu

போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க உத்தரவு

By

Published : Aug 6, 2022, 5:14 PM IST

சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க மாவட்ட ஆட்சியருக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலம் அபகரிப்பு; நீதிமன்றத்தை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை
போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலம் அபகரிப்பு; நீதிமன்றத்தை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை

சென்னை: கொளத்தூரில் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தில் குப்பை கிடங்கு அமைப்பதற்கான நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டது. இந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று கூறி கிடங்கு இருவர், உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் உரிமையியல் நீதிமன்றம் நிலம் இருவருக்கு சொந்தம் என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை, போலி ஆவணங்கள் மூலம் இருவரும் பெற்றுள்ளதாக கூறி, மறு ஆய்வு செய்யக் கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், போலி ஆவணங்கள் மூலம் நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று உரிமையியல் நீதிமன்றத்தில் உத்தரவை பெற்றுள்ளது நிரூபணமாகியுள்ளது. ஆகவே உரிமையியல் நீதிமன்ற உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன. அரசுக்கு சொந்தமான இந்த நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, போலி ஆவணங்களை தாக்கல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details