தமிழ்நாடு

tamil nadu

சொத்துக்குவிப்பு வழக்கு - எம்.ஆர் விஜயபாஸ்கர் விசாரணைக்கு ஆஜர்

By

Published : Oct 25, 2021, 2:18 PM IST

சொத்துக் குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சம்மனை ஏற்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

கேஎம்சிஹெச் மருத்துவக் கல்லூரி
கேஎம்சிஹெச் மருத்துவக் கல்லூரி

சென்னை:முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஆகியோர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜூலை 22 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

கேஎம்சிஹெச் மருத்துவக் கல்லூரி

முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

இந்தச் சோதனையில் வருமானத்திற்கு அதிகமாக 55 விழுக்காடு வரை எம்.ஆர் விஜயபாஸ்கர் சொத்து சேர்த்தது தெரியவந்தது. மேலும், அவருக்குத் தொடர்புடைய இடங்களில் இருந்து கணக்கில் வராத 25 லட்சம் ரூபாய் ரொக்கம், தங்க நகைகள், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக எம்.ஆர் விஜயபாஸ்கரிடம் நேரில் விசாரணை நடத்துவதற்காக ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலகத்தில் கடந்த செப்.30 ஆம் தேதி ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

இன்று ஆஜர்

ஆனால் உள்ளாட்சி தேர்தல் பணிகளைக் காரணம் காட்டி எம்.ஆர் விஜயபாஸ்கர் நேரில் ஆஜராக கால அவகாசம் கேட்டு தனது தரப்பு விளக்கத்தை அளித்திருந்தார். இதனையடுத்து உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன் அனுப்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த அக்.19 ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டு இன்று (அக்.25) எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆஜராகியுள்ளார்.

இன்று காலை 11 மணியளவில் ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலகத்தில் எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆஜரானார். அப்போது அவருடன் அவரது வழக்கறிஞரும் வந்திருந்தார். இந்தச் சோதனையில் சிக்கிய ஆவணங்கள் தொடர்பாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்து அலுவலர்கள் விசாரணை நடத்தவுள்ளனர்.

இதையும் படிங்க: ஆர்யன் கான் விவகாரம்; ஷாருக் கானுக்கு அத்வாலே அறிவுரை!

ABOUT THE AUTHOR

...view details