தமிழ்நாடு

tamil nadu

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்கக முகவரி மாற்றம்

By

Published : Jan 6, 2020, 11:44 AM IST

சென்னை: நீட் நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பம் செய்வதற்கான தகவல் கையேட்டில் தவறாக இடம்பெற்ற மருத்துவக் கல்வி இயக்குநரக முகவரி, நமது ஈடிவி பாரத் செய்தி எதிரொலியால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

NEET application, நீட் விண்ணப்பம்
NEET application

மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு உரிய தகவல் கையேட்டில் மருத்துவக் கல்வி இயக்குநரக அலுவலக முகவரி தவறுதலாக இடம்பெற்றுள்ளது என நமது ஈடிவி பாரத் டிசம்பர் 26ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது.

அதில், "தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வில் (நீட் தேர்வு) மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து கேட்டு அறிந்துகொள்வதற்கு அந்தந்த மாநில மருத்துவக் கல்வி இயக்கநரகங்களின் விவரங்களும் அளிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு...இயக்குநர், பொது சுகாதரம் மற்றும் நோய் தடுப்புத் துறை, சுகாதார சேவை இயக்குநரகம், 359, தேனாம்பேட்டை, சென்னை என்ற முகவரியும் தொடர்பு எண்களும் அளிக்கப்பட்டிருந்தன. அதனை மாற்றாமல் இந்த ஆண்டும் அதே தவறினை செய்துள்ளனர்.

இந்த ஆண்டு நடைபெற்ற மருத்துவக் கல்வி மாணவர்கள் சேர்க்கையின்பொழுது பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன. அது குறித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் தொடர்ந்து தேசிய தேர்வு முகமையைத் தொடர்புகொண்டது.

ஆனாலும் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் பெயர், முகவரி, தொடர்பு எண்கள் மாற்றம் செய்யாமல் உள்ளதால் மாணவர்கள் பெரிதும் அவதியடைந்துவருகின்றனர்" எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தேசிய தகுதித் தேர்வு முகமை நீட் தேர்விற்கான தகவல் கையேட்டில் மருத்துவக் கல்வி இயக்குநரக அலுவலக முகவரியை மாற்றம்செய்து அறிவித்துள்ளது.

அதில், 'நீட் தேர்விற்கான தகவல் கையேட்டில் பக்கம் 65இல் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை அலுவலக முகவரியை மாற்றம்செய்து அறிவிக்கப்படுகிறது. அதன்படி மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்குழு, மருத்துவக் கல்வி இயக்குநரகம், ஈவெரா பெரியார் சாலை, சென்னை-600010 என்ற முகவரியிலும், மாணவர்கள் '044-28361674' என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் .

மேலும், http://tnmedicalselection.net என்ற இணையதள முகவரியிலும், selmedi@yahoo.co.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களுக்கான தேசிய தேர்வு முகமையின் தகவல் கையேட்டினை https://ntaneet.nic.in/ntaneet/Welcome.aspx என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : விதிமீறல் கட்டடங்கள் வரன்முறை செய்ய ஆறு மாதம் அவகாசம் நீட்டிப்பு

Intro:நீட் தேர்வு விண்ணப்பக் கையேட்டில்
தவறாக இடம் பெற்ற தமிழக மருத்துவக் கல்வி இயக்க முகவரி மாற்றம்Body:நீட் தேர்வு விண்ணப்பக் கையேட்டில்
தவறாக இடம் பெற்ற தமிழக மருத்துவக் கல்வி இயக்க முகவரி மாற்றம்

சென்னை,

இளங்கலை மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பம் செய்வதற்கான தகவல் கையேட்டில் தவறாக இடம் பெற்ற மருத்துவக் கல்வி இயக்க முகவரி ஈடிவி பாரத் செய்தி எதிரொலியால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு உரிய தகவல் கையேட்டில் மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலக முகவரி தவறுதலாக இடம் பெற்றுள்ளது என ஈடிவி பாரத் செய்தி டிசம்பர் 26 ந் தேதி வெளியிட்டது.

அதில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து கேட்டு அறிந்துக் கொள்வதற்கு அந்தந்த மாநில மருத்துவக் கல்வி இயக்கங்களின் விபரங்களும் அளிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த ஆண்டு இயக்குனர், பொது சுகாதரம் மற்றும் நோய் தடுப்புத்துறை, சுகாதார சேவை இயக்குனரகம், 359, தேனாம்பேட்டை, சென்னை என்ற முகவரியும், தொடர்பு எண்களும் அளிக்கப்பட்டிருந்தன. அதனை மாற்றாமல் இந்த ஆண்டும் அதே தவறினை செய்துள்ளனர்.
இந்த ஆண்டு நடைபெற்ற மருத்துவக் கல்வி மாணவர்கள் சேர்க்கையின் பொழுது பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன. அது குறித்து மருத்துவக் கல்வி இயக்குனரகம் தொடர்ந்து தேசிய தேர்வு முகமையை தொடர்பு கொண்டது. ஆனாலும் மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் பெயர், முகவரி, தொடர்பு எண்கள் மாற்றம் செய்யாமல் உள்ளதால் மாணவர்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர் என கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தேசிய தகுதித் தேர்வு முகமை நீட் தேர்விற்கான தகவல் கையேட்டில் மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலக முகவரியை மாற்றம் செய்து அறிவித்துள்ளது.

அதில் நீட் தேர்விற்கான தகவல் கையேட்டில் பக்கம் 65 ல் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை அலுவலக முகவரியை மாற்றம் செய்து அறிவிக்கப்படுகிறது. அதன்படி மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்குழு, மருத்துவக் கல்வி இயக்ககம், ஈவெரா பெரியார் சாலை, சென்னை-600010 என்ற முகவரியிலும், மாணவர்கள் 044-28361674 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் . மேலும் http://tnmedicalselection.net என்ற இணையதள முகவரியிலும், selmedi@yahoo.co.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



மாணவர்கள் தங்களுக்கான தேசிய தேர்வு முகமையின் தகவல் கையேட்டினை https://ntaneet.nic.in/ntaneet/Welcome.aspx என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடதக்கது.








https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/neet-hand-book-11-languages-including-tamil/tamil-nadu20191226143915141Conclusion:

ABOUT THE AUTHOR

...view details