தமிழ்நாடு

tamil nadu

ஈவிகேஎஸ் இளங்கோவன் 26 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

By

Published : Mar 2, 2023, 12:10 PM IST

Updated : Mar 2, 2023, 12:19 PM IST

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை விட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 26 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் 26 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
ஈவிகேஎஸ் இளங்கோவன் 26 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

சென்னை:ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 15 சுற்றுகளாக எண்ணுவதற்கு திட்டமிடப்பட்டு விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. 5ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 39 ஆயிரத்து 792 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 13 ஆயிரத்து 609 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். அதிமுக வேட்பாளரை விட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 26 ஆயிரத்து 183 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

இன்னும் வெற்றி உறுதி செய்யப்படாத நிலையில் திமுக தொண்டர்கள் அறிவாலயத்தில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே வாக்கு எண்ணும் மையத்தை விட்டு அதிமுக வேட்பாளர் தென்னரசு இருண்ட முகத்தோடு வெளியேறினார்.

இதையும் படிங்க: நாம் தமிழர், தேமுதிக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எவ்வளவு.?

Last Updated :Mar 2, 2023, 12:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details