தமிழ்நாடு

tamil nadu

ஜெயலலிதா நினைவு நாள்: நினைவிடத்தில் மரியாதை செலுத்திய இபிஎஸ், ஓபிஎஸ்

By

Published : Dec 5, 2021, 12:07 PM IST

Updated : Dec 5, 2021, 5:43 PM IST

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இபிஎஸ், ஓபிஎஸ்
இபிஎஸ், ஓபிஎஸ்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிச.5) அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை வாலஜா சாலையில் இருந்து மெரினா நினைவிடம் வரை அதிமுக தொண்டர்கள் ஊர்வலமாக சென்றனர்.

ஜெயலலிதா இறந்த தினத்தை குறிக்கும் வகையில் பலர் கருப்பு சட்டை அணிந்து தூக்கநாளாக கடைபிடித்தனர். முன்னதாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், கட்சி நிர்வாகிகள், எம்பி, எம்எல்ஏகள் அதிமுக நினைவிடத்தில் இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வருகைக்காக காந்தி இருந்தனர்.

ஜெயலலிதா நினைவு நாள்: நினைவிடத்தில் மரியாதை செலுத்திய இபிஎஸ், ஓபிஎஸ்

பின்னர் எடப்பாடி பழனிசாமி வருகை தர, அனைவரும் இணைந்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தில் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

அதிமுக உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றி பெற வேண்டும் எனவும், பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்துள்ள திமுகவினர் மக்களை ஏமாற்ற விட மாட்டோம் உள்ளிட்ட உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டனர்.

அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு

இதையும் படிங்க:இந்தியாவில் ஒமைக்ரான்: தொற்று எண்ணிக்கை 5 ஆக உயர்வு

Last Updated :Dec 5, 2021, 5:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details