தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் அறிமுகமாகும் ஹூண்டாய் எலக்ட்ரிக் கார்!

By

Published : Jul 23, 2019, 8:33 PM IST

சென்னை: சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக சென்னையில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் நாளை அறிமுகமாகிறது.

ஹூண்டாய் எலக்ரிக் கார்

ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் பேட்டரி கார் உற்பத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த மாநாட்டில் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்ய இருந்த பேட்டரி கார்கள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், தமிழ்நாடு அரசுடன் ஹூண்டாய் நிறுவனம் போட்டுகொன்ட ஒப்பந்த்தின்படி 2000 கோடி முதலீட்டில் தயாரிக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் கார் நாளை சந்தைக்கு வரவுள்ளது.

இந்த பேட்டரி காரில் தற்போது பயன்படுத்தப்படும் அனைத்து வசதிகளும் இடம்பெற்றுள்ளன. நடுத்தர பிரிவு மக்கள் பயன்படுத்தும் வகையில் கார் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்தது. ஹூண்டாய் நிறுவனம் தயாரித்துள்ள பேட்டரி காரை நாளை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

Intro:Body:சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக சென்னையில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் நாளை அறிமுகப்படுத்தப்பட உள்ளது

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதல் எலக்ட்ரிக் காரை கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.

உலக முதலீட்டாளர் மாநாட்டில் தமிழக அரசு உடன் ஹூண்டாய் நிறுவனம் போடப்பட்ட ஒப்பந்த்த்தின் படி 2000 கோடி முதலீட்டில் தயாரிக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் கார் நாளை சந்தைப்படுத்தப்பட உள்ளது.

நடுத்தர பிரிவு மக்கள் பயண்படுத்தும் வகையில் கார் தயாரிக்கப்பட்டுள்ளது.Conclusion:

ABOUT THE AUTHOR

...view details